பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 105 “மீனமுகம், ஆமைமுகம், உவகமெல்லாம் தோண்டிப் பறித்த பன்றிமுகம், சிங்கமுகம், என்றிப்படி எல்லாம் சொல்லாமல், அறிவின் கணிவைக் கொண்டவரென்றும், சோலைமலையிடத்து வாழும் பண்பாளரென்றும், அழகிய திருமேனியினை உடையவ ரென்றும் உம்மைப்பேரிட்டு அழைத்தவர்தாம் யாவரோ?” திருமாலின் மச்சாவதாரம் வராகவதாரம், கூர்மாவதாரம், நரசிம்மாவதாரம் ஆகியவற்றைக் குறித்து, அவரை அப்படி அழையாமல், ஏணிப்படி அழகர் என்றனர்? என்று வினவுகிறார் கவிஞர். வீதி வரக் கண்டு! இராமபிரான் மிகவும் அழகன், பூமியிடத்தே இருந்து தோன்றியவளான சீதையின் கணவன்; அவன் திருவீதியிலே பவனி வருகின்றான்! அவன் அழகிலே மயங்கினாள் ஒரு பெண். தன் அரையிடத்து ஆடையும் நெகிழ்ந்து காலில் விழ, அவள் தன்னை மறந்து. அவனையே காமுற்று நிற்கிறாள். இப்படிக் கற்பித்துப் பாடுகிறார் காளமேகம். ஒரொருமா வொன்றுமா வொன்பதுமா வின்கலையை ஈரொருமா மும்மாவுக் கீந்ததே-பாரறியப் பொன்மானின் பின்போன பூமங்கை யாள்வாரைக் கன்மாவின் வீதிவரக் கண்டு. (164) 'உலகமெல்லாம் அறியும்படியாகப் பொன்மானின் பின்னே சென்றவர் பூமங்கையான சீதையை ஆட்கொண்டவரான இராமபிரான், தன் புண்ணிய வசத்தினாலே அவர் திருவீதியிலே உலா வருதலைக் கண்டனள் ஒப்பற்ற ஒரு பெண்ணணங்கு. அவர்மேல் அவள் மையலும் கொண்டனள். அந்தக் காட்சி அவளுடைய காலுக்கு அளித்து விட்டதே? என்ன கொடுமை இது. ஒரொருமா ஒப்பற்ற ஒரு திருமகள் போல்வாள். ஒன்றுமா ஒன்பதுமா-பத்துமா, அரை.ஈரொருமா மும்மா - ஐந்துமா கால். பொன் மான் - மாயமான், சீதையின் விருப்பத்தை நிறைவேற்ற இராமபிரான் துரத்திச்சென்றது. என்ன பலன்? ஒன்றைச் செய்தால், செய்தவர்க்கு ஏதாவது அதனாற் பலன் இருக்க வேண்டும் பலனில்லாமல் ஒரு செயலைச் செய்பவர்களை உலகம் என்றும் மதியாது. இந்த உலக உண்மையைச் சிவ பெருமான் மீதும் ஏற்றித் திருவிருத்திநாதரைப் போற்றுகின்றார் காளமேகம்.