பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் திருவிருத்தி நாதர் திருவளியா தென்னைக் கருவிருத்தி யென்னபலன் கண்டார்-எருதுபோய்க் கோட்டிபத்தி லேறினரோ கோவணம்போய்ப் பட்டாச்சோ ஒட்டிலிரந் துண்டதும்போச் சோ? (165) "திருவிருத்திநாதர் தம்முடைய திருவடிப்பேறாகிய செல்வத் தினைத் தந்தருளாமல், என்னைக் கருக்குழியிலே இருத்தியத னாலே என்ன பலனைக் கண்டுவிட்டார்? தம்முடைய எருதைக் கைவிட்டுக் கொம்புகளையுடைய யானையின் மேலே அவர் ஏறிவிட்டாரோ அல்லது, அவருடைய கோவணம் - போய் உடுத்துவதும் பட்டாக அவருக்கு உயர்ந்ததோ? அல்லது, ஒட்டிலே இரந்து உண்ணுகின்ற தன்மையாவது அவருக்கு இல்லாமற் போயிற்றோ? எதுவும் இல்லையே! இருந்தும் என்னைக் கருவிருத்தி அவர் கண்ட பலன்தான் என்னவோ? தம்மைக் கருக்குழியில் தள்ளியதற்கு வருந்தி, இப்படிப் பாடுகின்றார் கவிஞர். இதனால் தம் பிறவியினை அறுத்தருளப் பெருமானை வேண்டினரும் ஆம். பெண்கள் பெருமை கடவுளரும் பெண் மாயையினை விட்டவர்களில்லை. அவர்கள் தம்முடனேயே, தம் உடலுடனேயே தத்தம் நாயகியரைக் கொண்டு சுமக்கின்றனர். இப்படிக் கடைமொழி மாற்றாகச் செய்த செய்யுள் இது. உலகு உண்டு உமிழ்ந்த தாமரைக் கண்ணோன் என்பதை முதலிற் கொண்டு பொருத்திப் பொருள் காண வேண்டும். இந்திரையை மார்பில் வைத்தான் ஈசன் உமையையிடத் தந்தி பகலழைத்தான் அம்புயத்தோன்-கந்தமிகு வெண்டா மரைமயிலை வேண்டிவைத்தா னாவிலுல குண்டுமிழ்ந்த தாமரைக்கண் னோன். (166) “உலகினை எடுத்து விழுங்கி மீளவும் உமிழ்ந்த செந்தாமரைக் கண்ணனான திருமால், இந்திரையாகிய திருமகளைத் தன் மார்பிடத்தே வைத்துக் கொண்டான். ஈசனான சிவபிரானோ, உமையைத் தன் இடப்பாகத்திலேயே இரவு பகலாகக் கொண்டிருக்கின்றான். தாமரை வாசனாகிய பிரம தேவனோ, வெண்டாமரையிலே வீற்றிருப்பவளாகிய கலைவாணி யைத் தன் நாவிலேயே கொண்டிருக்கிறான்.” “முத் தேவர்களின் நிலையே இப்படியானால், மனிதர்கள் பெண்களைப் போற்றுவதும், அவரைத் தாம் அடையுமாறு காமுற்றுத் திரிவதும் தவறாகுமோ?" இவ்வாறு, ஆண்களின் காமநோய்க்கு ஒரு சமாதானமும் கூறுகிறார் கவிஞர்.