பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பாண்டித் தலங்கள் பாண்டியநாட்டுச் சிவத்தலங்கள் எவையெனக் கூறுகின்ற செய்யுள் இது. கூடல் புனவாயில் குற்றால மாப்பனுர் ஏடகநெல் வேலி யிராமேசம்-ஆடானை தென்பரங்குன் றஞ்சுழியல் தென்றிருப்புத் துர்காசி வன்கொடுங்குன் றம்பூ வணம். (169) கூடல் - மதுரை; புனவாயில் - திருப்புன வாயில் குற்றாலம் - திருக்குற்றாலம்: ஆப்பனூர்-திருவாப்பனூர், ஏடகம்-திருவேடகம்: நெல்வேலி - திருநெல்வேலி, இராமேசம் - திருஇராமேச்சுரம், ஆடானை - திரு ஆடானை, தென்பரங்குன்றம் திருப்பரங்குன்றம், சுழியல், திருச்சுழியல்; திருப்புத்துர் - திருப்புத்துர், தென்காசி - தென்காசி, வன்கொடுங்குன்றம் - திருக்கொடுங் குன்றம், பூவணம் - திருப்பூவணம்; இவை யாவும் பாண்டிநாட்டுத் தலங்கள் ஆகும். சொல்லாட்சி மிகுந்தவர் செய்யும் கவிதைகள் எவ்வாறு சந்தச் செறிவும் பொருட்செறிவும் தம்முள் ஒருங்கே இணைந்து, செவிக்கும் உளத்துக்கும் இனிமை தருவனவாக அமைகின்றன என்பதற்கு இச்செய்யுள்கள் சான்றுகளாகும். கவியேறான காளமேகப் புலவரின் செய்யுள்கள் இவ்வகையிலே ஒப்பில்லாத செழுமை கொண்டவை. நினைந்து நினைந்து கவியின்பத் தேறலை நுகர்வாருக்கு நித்தமும் இனிமையும் அறிவு நலமும் தருபவை. தெய்விகக் கவிதைகள் என்றதும் இதன் இத்தகைய சிறப்பினாலேதான். கால்வெள்ளத்தைக் கடந்து என்றும் புதுப்பொருள் நயம் காட்டிக் காட்டிக் கற்பனைக் காட்சிகளைக் கவினுறப் படைக்கும் சொல்லோவியங்கள் இவை. 7.செறிவான செய்யுட்கள் இந்தப் பகுதியிலே விளங்கும் பாடல்கள் பலவும், கவிஞர் தனித்த சமயங்களிலே தனிப்பட்ட செய்திகளையும் மனிதர் களையும் போற்றியும் பழித்தும் பாடியவையாகும். இவற்றுள் கவிஞரின் சிறந்த புலமை நலத்தினையும் சொற்சுவையோடு பொருட்சுவையும் பொருந்தக் கவியியற்றும் திறத்தினையும் காணலாம். விழி வேல் தாசி கமலாட்சி என்பவள் கவிஞருக்கு வேண்டியவளாக இருந்தாள். ஒரு சமயம் அவளுக்கு மருந்து வாங்குவதற்காகக்