பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

HeÓlubiš Gzései: - 109 கடைக்குச் சென்றார் காளமேகம். கடைக்காரச் செட்டியின் பெயர் பெற்றான் செட்டி அவன் கடையடைப்பித்துத் தன்னைப் பாடினால்தான் மருந்து தருவதாகச் சொல்லக் கவிஞர் அப்போது பாடியது. முற்றாத காஞ்சியினும் முல்லையினும் பாலையினும் கற்றான்பின் சென்ற கருணைமால்-பெற்றான்றன் ஆலைப் பதித்தா ரளகத்தி யாட்கயனார் வேலைப் பதித்தார் விழி. (170) “என்றும் முடிவு பெறுதல் என்பதில்லாத காஞ்சிபுரத்திலும், காட்டுப் பகுதியான முல்லை நிலத்திலும், பாலை நிலத்தினும் கற்றான் பின்னே சென்ற கருணையினை உடையவன் திருமால்.” "அவனைப்போன்ற கருணையுள்ள, இந்தக் கடற்கரைப் பட்டினத்தே யுள்ளவனான இந்தப் பெற்றான் செட்டியின் நீண்ட கூந்தலையுடைய மனைவிக்குப் பிரமதேவர் வேலாயுதத்தினையே கண்ணாகப் படைத்துள்ளனரே! என்னே சிறப்பு அது!” 'கற்றான்' என்ற சொல்லுக்குப் படித்தவன் எனவும், கன்றையுடைய பசுவெனவும், முனிவன் எனவும் பொருள் 'கற்றான் பின்சென்ற திருமால்' என்பதனை இம்மூவகைப் பொருள்க ளுடனும் கூட்டிப் பொருள் கொள்ளவேண்டும். காஞ்சியிலே திருமால் பைந்நாகப் பாயைச் சுருட்டிக் கொண்டு திருமழிசையாரின் பின்னாகச் சென்றதையும், காட்டிலே கண்ணபிரானாகப் பசு மேய்த்தவனாகச் சென்றதையும், பாலை யிலே விசுவாமித்திரனைப் பின்தொடர்ந்து இராமனாகச் சென்றதனையும் இவை குறிக்கும். அளகம் - கூந்தல், தார்.அளகம் - தாரையுடைய அளகமும் ஆம்; தார் - பூமாலை. சரிந்த தனம்! பெற்றான் செட்டியின் மனைவிக்கு ஒரு குழந்தையும் பிறந்தது. அப்போது கவிஞர் பாடிய செய்யுள் இது. - கஞ்ச முகையும் களிற்றானை யின்கொம்பும் அஞ்சுமுலை நாலுமுலை யானதுவும்-மிஞ்சுபுகழ் பெற்றான்தன் மாலை பிறர்களித்த துங்குதலை கற்றான் பிறந்தபின்பு காண். (171) “தாமரையின் மொட்டும், களிற்று யானையின் கொம்பும், தாம் உருவினாலே ஒப்பாக மாட்டோம் என் அஞ்சி ஒதுங்கி நிமிர்ந்த இவளின் கொங்கைகள் தொங்கு முலைகளாக மாறிப் போயினதும், நிறைந்த புகழுடைய பெற்றான் செட்டி தன் ஆசையைப் பிறருக்கு அளித்ததும் எல்லாம், மழலை கற்றவனாகிய இந்தக் குழந்தை வந்து பிறந்ததன் பின்னரே என்று அறிவாயாக"