பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கஞ்சம் - தாமரை முகை - மொட்டு தாமரை மொட்டும், களிற்றுயானைக் கொம்பும் நிமிர்ந்த இளங் கொங்கைகட்கு உவமையாயின. மகன் பிறந்ததனால் முலை தொங்கிப் போன தன்மையினை, 'நாலு முலை' என்றனர். அவன் வேற்றுப் பெண்ணைச் சுற்றித் திரிவதைக் கண்டு பாடியது இதுவெனவும் கொள்ளலாம். அல்லது, அவனுடைய புதிய வேசை யுறவினைக் குறித்து எச்சரித்துப் பாடியதும் ஆம் கழுதைக் குரல்! நாகையிலே, ஒரு தாசி மிகவும் கர்ணகடுரமான குரலிலே பாடினாள். சகிக்க முடியாத அந்த வேதனையைத் தாங்கிக் கொண்டிருந்த கவிஞரிடம், 'பாடல் எப்படி?’ என்று ஒருவர் கேட்டுவிட்டார்! அப்போது பாடியது இது. வாழ்த்த திருநாகை வாகான தேவடியாள் பாழ்த்த குரலெடுத்துப் பாடினாள்-நேற்றுக் கழுதைகெட்ட வண்ணான்கண் டேன்கண் டேனென்று பழுதையெடுத் தோடிவந்தான் பார். (172) "வாழ்வு சிறந்த அழகிய நாகைப் பட்டினத்திலே, உடற்கட்டுள்ள இந்தத் தாசியானவள், தன் பாழான குரலினாலே உரக்கப்பாடினாள். நேற்றுத் தன் கழுதையைப்போக்கடித்துவிட்ட வண்ணான்,"கண்டேன்! கண்டேன்' என்ற சொல்லியவனாக, ஒரு தடியையும் கையில் எடுத்துக் கொண்டவனாக, இவ்விடத்திற்கு ஒடோடியும் வந்தான். இந்த வேடிக்கையைப் பாருங்கள். 'அவளுடைய குரல் கழுதையின் கத்துதலுக்குச் சமமா யிருந்தது' என்று சாதுரியமாகப் பழித்தனர் கவிஞர். அவள் வெட்கித் தலை கவிழ்ந்தாள். கவிஞரை அபிப்பிராயம் கேட்ட வரும் அவளைத் தொடர்ந்தனர். நான்கு வகை நயனம் மதுரையிலே, கூத்தாள்’ என்றொரு தாசி இருந்தாள். கவிஞரிடத்தே மிகவும் அன்பு கொண்டவள் அவள். அவள் கண்களையும், அவள் தமக்கை, தாய், பாட்டி ஆகியோரின் கண்களையும் இப்படிக் கூறிச் சிறப்பிக்கிறார் கவிஞர். கூத்தாள் விழிகனெடுங் கூர்வேலாம் கூத்தாள்தன் மூத்தாள் விழிகள் முழுநீலம்-மூத்தாள்தன் ஆத்தாள் விழிகள் அரவிந்தம் ஆத்தாள்தன் ஆத்தாள் விழிகளிரண் டம்பு. . (173) கூத்தாள் என்பவளின் விழிகள் இரண்டும் நெடிதான கூரிய வேல்முனையைப் போன்றன. கூத்தாளுடைய மூத்தாளின் விழிகள்