பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் "முன்புறத்திலே கடிவாளத்தைப் பற்றி மூன்றுபேர்கள் இழுத்துக்கொண்டு போகவும், பின்புறமாக இருந்து இரண்டு பேர்கள் தள்ளிக்கொண்டு போகவுமாக எப்பொழுதும் வேதஒலி வெளிப்படும் வாயினனான விகடராமனின் குதிரையானது, ஒரு மாதத்தில் காதவழியினைக் கடந்து விடும் வேகத்தை உடையதாகும்.” காதம் - பத்து மைல்” ஏற்ற மா! வேங்கட்டன் என்பவர் ஆமூரில் இருந்தவர். அவருடைய குதிரையைப் புகழ்ந்து பாடியது இச்செய்யுள். இவர் முழுப்பெயர் திருவேங்கட முதலியார் ஆகும். - ஆறும் பதினாறு மாமூரில் வேங்கட்டன் ஏறும் பரிமாவே யேற்றமா-வேறுமா வெந்தமா சும்மா வெறுமா களிகிளற வந்தமா சந்துமா மா? *. (176) “ஆற்றுப் பாய்ச்சலும், பதினாறு பேறுகளும் மலிந்துள்ள ஆமூரிலே, வேங்கட்டன் என்பவன் ஏறிச் செலுத்துகின்ற குதிரையே மிகவுஞ் சிறந்த குதிரையாகும். வேறு குதிரைகள் எல்லாம் வெந்த மா, சும்மா, வெறுமா, களி கிளற வந்த மா என்ற சொற்களிலே பயின்று வரும், 'மா' என்ற சொல் எங்ங்னம் குதிரையைக் குறிக்காதோ, அதுபோலவே குதிரைகளாகக் கூறத் தகுந்தன வாகா” பதினாறு பேர்கள்! "பதினாறும்பெற்றுப்பெருவாழ்வு வாழ்வாய்"எனப்பலரும் வாழ்த்துகிறார்கள். அவை எவை என்பதனைக் கூறுவது இச் செய்யுள், - துதிவாணி வீரம் விசயஞ் சந்தானம் துணிவுதனம் அதிதானியஞ் செளபாக்கியம் போக - வறிவழகு புதிதாம் பெருமை யறங்குலநோ வகல்பூண்வயது பதினாறுபேறும் தருவாய் மதுரைப் பராபானே. (177) மதுரைப் பராபரனே - மதுரைப் போரூரிலே கோயில் கொண்டிருக்கின்ற பரம்பொருளே துதி புகழ் (1) வாணி - கல்வி (2), வீரம் - மனவுறுதி (3), விசயம் - வெற்றி (4), சந்தானம் - மக்கட்பேறு (5), துணிவு - தைரியம் (6), தனம் - செல்வம் (7), அதி தானியம் - அதிகமான தானியவளம் (8), செளபாக்கியம் - சிறந்த இன்பம் (9), போகம் - நல்ல அனுபோகம் (10), அறிவு - ஞானம் (1), அழகு-பொலிவு (12), புதிதாம் பெருமை-புதுவதாகவந்து நாளுக்கு நாள் சேர்கின்ற சிறப்பு (13), அறம்- அறஞ்செய்யும் பண்பு (14), குலம் - நல்ல குடிப்பிறப்பு (15), நோவகல் பூண்வயது - நோயில்லாமை