பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் - 113 யோடு கூடியமைந்த நீண்ட ஆயுள் நலம் (16) என்ற பதினாறு பேறும் என்று சொல்லப் படுகின்ற இந்தப் பதினாறு பேறுகளையும், தருவாய் தந்து எனக்கு அருள் செய்வாயாக, அறிவிப்பார் இல்லையே! தெருவிலே கீரை விற்றுக் கொண்டு போனாள் ஒருத்தி. அவளின் அழகினை வியந்து கூறிய செய்யுள் இது. - வெள்ளை யானேறும் விமல ரடிபணியும் பிள்ளையான் வாழும் பெருந்தெருவில்-வள்ளை இலைக்கறிவிற் பாண்மருங் குலிற்றுவிடு மென்று முலைக்கறிவிப் பாரிலையே முன். (178) “வெள்ளையான காளையின்மீது எழுந்தருளுகின்ற விமலனார் சிவபெருமான். அச் சிவபிரானின் திருவடிகளைப் பணிகின்றவன் பிள்ளையான். அவன் வாழுகின்ற பெருந் தெருவிலே,வள்ளைக் கொடியின் இலையைக் கறி சமைப்பதற்காக விறகிறவள் இவள். இவளுடைய இடையானது சுமை தாளாமல் இற்றுவிடும் என்று, இவளுடைய பருத்த தனங்களுக்கு இவள் முன்னே போய் எடுத்துச் சொல்லுபவர் இவ்விடத்தில் எவரும் இல்லையே?” பிள்ளையான் - பிள்ளையன், காவை வடமலையப்ப பிள்ளையன் என்றாற்போலத் தலைமைப் பட்டம். இரவு பட்ட பாடு தமிழறியாத தாசி ஒருத்தியின் வீட்டிற்குச் சென்றதனைப் பற்றி வேடிக்கையாகக் கவிஞர் கூறிய செய்யுள் இது. ஏமிரா வோரியென்பா ளெந்துண்டி வஸ்தி யென்பாள் தாமிராச் சொன்ன வெல்லாம் தலைகடை தெரிந்ததில்லை போமிராச் குழும் சோலைப் பொருகொண்டைத் திம்மிகையில் நாமிராப் பட்டபாடு நமன்கையிற் பாடுதானே. (179) 'ஏமிரா வோரி (என்னடா, அடே) என்பாள், ‘எந்துண்டி வஸ்தி (எங்கிருந்து வருகின்றாய்)என்பாள், இரவு அவள் இப்படிச் சொன்னதெல்லாம் தலை கடை எதுவும் நமக்குத் தெரிந்தவாக இல்லை. கழியும் இரவு சென்று அடர்கின்ற சோலையினைப் போன்றதாக விளங்கும் கொண்டையினையுடைய திம்மி என்பவளிடத்திலே, நாம் இவ்வாறாக இரவெல்லாம் பட்டபாடு, எமனிடத்திலே சிக்கினவர் படுகின்ற பெரும்பாடு போன்றதே யாகும்.'