பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 1.15 ஆராயு முத்தமிழாற் றுரிற்சோமி யழகுகண்டு நாராயணனெடு மாலாகினான் மற்றை நான்முகனும் ஓராயிரமட லூர்ந்தான் வின்மார னுருவழிந்தான் பேரான வானவர் கோனும்கண் ணாயிரம் பெற்றனனே. (182) "இயலிசை நாடகமென்ற முத்தமிழையும் ஆராய்கின்ற சிறப்புடையது ஆற்றுார். அந்த ஆற்றுாரிலேயுள்ள சோமி என்பவனின் அழகினைக் கண்டதும் நாராயணன் நெடுமாலாக ஆகினான்! அஃதன்றி நான்முகனும் ஒராயிரம் மடல் ஊர்ந்தான்: கருப்பு வில்லியான மாரனோ தன் உடனே அழியப் பெற்றான். புகழ்பெற்ற வானவர் கோமானோ ஆயிரங் கண்களைப் பெற்றவனானான்.” நெடுமால் நீண்ட மேனி: பெரிதான மயக்கம். ஒராயிரம் மடல் ஏறல் - ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரையிலே வீற்றிருத்தல்: ஆயிரமுறை மடலூர்தல், உருவழிதல் உடல் மெலிதல்:சாம்பராதல். ‘தேவர்களையும் நனியச்செய்த பேரழகினை உடையவள் அவள்’ என்று பாராட்டுகின்றனர் கவிஞர். - இரு பாகற்காய்! இஞ்சிகுடி என்னும் ஊரிலே ஒரு தாசி இருந்தாள், அவள் பெயர் கலைச்சி. அவள், கவிஞரைப் பாராட்டாது ஏளனஞ் செய்ய அவர் பாடிய வசை இச்செய்யுள். ஏய்ந்த தனங்க ளிரண்டுமிரு பாகற்காய் வாய்ந்தவிடை செக்குலக்கை மாத்திரமே-தேய்ந்தகுழல் முக்கலச்சிக் கும்பிடிக்கு மூதேவி யாள்கமலைக் குக்கலிச்சிக் குங்கலைச்சிக் கு. (183) “தேய்ந்த குழல் முக்கலச்சிக்கும் பிடிக்கும் மூதேவியாள் - பாறிப்போன தலைமயிரிலும் முக்கலம் அளவிற்குச் சிக்குப் பிடித்திருக்கும் மூதேவி போன்றவளான தன்மையுடையவள்; கமலைக் குக்கல் இச்சிக்கும் கலைச்சிக்கு திருவாரூர்த் தெருநாய் மட்டுமே விரும்பி அணுகக் கூடியவள். அத்தகையவளான இந்தக் கலைச்சி என்பவளுக்கு, ஏய்ந்த தனங்கள் இரண்டும் இரு பாகற்காய் - அமைந்த தனங்கள் இரண்டுமோ என்றால், இரண்டு பாகற்காய்களைப் போன்று ஒட்டித் தொங்குவனவாம். வாய்ந்த இடை செக்கு உலக்கை மாத்திரமே பொருந்திய இடையோ வென்றால் செக்கு உலக்கையின் அளவேயாகும்?" இதனால், கலைச்சியின் அழகை எல்லாம் இழித்துப் பழித்தனர் என்க.