பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் " முந்நான்கில் ஒன்று உடையான் - பன்னிரு இராசிகளிலே ஒன்றான மீனைத் (மகரம்) தன் கொடியாக உடையவனான மன்மதன், முந்நான்கில் ஒன்றெடுத்து - பன்னிரு இராசிகளிலே ஒன்றான (தனுசு) வில்லினை எடுத்து, முந்நான்கி லொன்றின்மேல் மோதினான். பன்னிரு இராசிகளில் ஒன்றாகும் கன்னியாகிய என்றன்மீது மோதி விட்டனன், ஒஓ! அழகிய மயிலனைய தோழியே! அன்றணைதான் வாராவிட்டால் அந் நாளிலே என்னைத் தழுவிய என் காதலன் வாராவிட்டால், முந் நான்கில் ஒன்று அரிந்தால் ஆகுமோ? - பன்னிரு இராசிகளுள் ஒன்றான மேடத்தை (ஆட்டை) அரிந்து பலியிட்டால் மட்டும் என் நோய் நீங்கிப் போகுமோ? நீங்காது என்பது கருத்து. குட்டிச் செட்டி! குட்டிச்செட்டி என்றொருவன் கவிஞரை அவதூறாகப் பேசி ஏளனம் செய்தபோது, அவன் சொல்லிய ஆயிரம் யானை என்ற சொல்லை அமைத்து, அவனை அவமானப் படுத்தும் வகையிலே, கவிஞர் செய்த செய்யுள் இது. எட்டிகுளம் கிராமத்து அதிபதியான ஒரு பிரபு, புலவர்க்குக் கொடுக்கும் பரிசினைக் குட்டிச் செட்டி என்பவன் மறுத்துத் தனக்கும் பாகந் தராமையால், அப்புலவர்களுக்கு விரைவில் பரிசளிக்காமல் துன்புறுத்தி வந்தான். அதனைப் புலவர்கள் உரைக்கக் கேட்டுக் கவிஞர் இச்செய்யுளைச் சொன்னார். சொன்னதும், அந்தக்குட்டிச் செட்டியின் மகள் துன்பத்துக்கு உள்ளாக, அவன் நடுங்கிப் பணிந்து புலவர்களைப் போற்றினான். அவன் மகள் துயரமும் நீங்கியது. இது இச்செய்யுளின் வரலாறாகக் காணப்படுவது. எட்டி குளத்திலிருந்து சரக்கு விற்கும் குட்டிசெட்டி தன்மகளைக் கொண்டுபோய்-நொட்டுதற்கே ஆயிரம் யானை யெழுநூறு க்டின்பகடு பாயும் பகடேண்பத் தைந்து: (188) இதன் பொருள் வெளிப்படை, அவன் தன் மகளையே கெடுத்த கொடியவன் என்று பழிக்கிறார். ஒருத்தி போட்டாளே! கும்பகோணத்திலே, ஒரு சமயம் ஒரு பெரிய சோறுட்டு விழா நடந்தது. அந்தச் சோறுட்டு விழாவிற்காளமேகமும் கலந்து கொண்டார். பந்தி பந்தியாக அமர்ந்து அனைவரும் உணவருந்திக் கொண்டிருந்தனர். அப்போது, ஒரு நிகழ்ச்சி நடந்தது. தலையின் முன்புறத்திலே குடுமிவைக்கும் வழக்கமுடைய ஒருவன், கவிஞருக்கு அருகிலேயே இருந்து சாப்பிட்டுக் கொண்