பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

! புலியூர்க் கேசிகன் 119 டிருந்தான். அவனுடைய குடுமிதிடுமென அவிழ்ந்து இலையிலும் போய் விழுந்தது. தன் தலைமயிரை எடுத்து அவன் உதறவே, எச்சிற் பருக்கைகளுள் சில காளமேகத்தின் இலையிலே யும் போய் விழுந்தன. அதனால் அவனை இப்படிப் பாடி நிந்திக்கிறார் கவிஞர். சுருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா-திருக்குடந்தைக் கோட்டானே நாயே குரங்கே யுனையொருத்தி போட்டாளே வேலையற்றுப் போய். (189) "கட்டவிழ்ந்து போன முன் குடுமியினையுடைய சோழியனே! சோற்றுப்பொருக்கு காய்ந்து அகலாதே ஒட்டிக் கொண்டிருக்கும் வாயனே! இழிந்தவனே! திருக்குடந்தை நகரின் கோட்டானே! நாயே! குரங்கே! ஒருத்தி, வேறு வேலையற்றுப் போய் உன்னையும் ஒரு பிள்ளையாகப் பெற்றுப் போட்டாளே? அவளை எப்படி நொந்து கொள்வது?" சுருக்கு-தலைமுடியை அள்ளிச் செருகும் தன்மை. பொருக்கு - காய்ந்துபோன பருக்கைகள். கோட்டான் - ஆந்தை இந்தச் செய்யுள் அடியிற் கண்டபடியும் வழங்கும். சொருக்கவிழ்ந்த முன்குடுமிச் சோழியா சோற்றுப் பொருக்குலர்ந்த வாயா புலையா - திருக்குடந்தை நாயா நரியாவுன் னாய்முகமும் சேய்வடிவும் தாயார்தான் கண்டிலளோ தான்? (189.91) சத்திரத்துச் சாப்பாடு நாகப்பட்டினத்திலே காத்தான் வருணகுலாதித்தன் சத்திரம் ஒன்று இருந்தது. அந்தப் பக்கமாகப் போய்க் கொண்டிருந்த காளமேகப்புலவர் உணவுக்காகச் சென்றார். பகலெல்லாம் காத்திருக்கச் செய்து, இரவில் நெடுநேரத்திற்குப் பின்னரே சாப்பாடு என்று ஏதோ ஒன்றையும் அங்கே அவருக்குப் போட் டார்கள். கவிஞரின் பொறுமை அதற்குமேலும் நிலைபெறவில்லை. இப்படிப் பாடுகின்றார். கத்துக்கடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் அத்தமிக்கும் போதி லரிசிவரும்-குத்தி உலையிலிட ஆரடங்கு மோரகப்பை யன்னம் இலையிலிட வெள்ளி எழும். (190) “ஒலிக்குங் கடலின் ஆரவாரத்தினாலே சூழப்பெற்றிருக் கின்ற, இந்த நாகப்பட்டினத்துக் காத்தான் என்பவனுடைய சத்திரத்திலே, பொழுது மலைவாயிலிற் சென்று மறைகின்ற