பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பொழுதிலேதான் அரிசி வரும். அரிசியைத் தீட்டி உலையிலே இவர்கள் இடுவதற்குள்ளாக ஊரெல்லாம் உறங்கி ஒலியடங்கிப் போகும். இவர்கள் இரவலர்க்கு ஒர் அகப்பை அன்னத்தை இலையில் இடவும் வேண்டுமானால், அதற்குள் விடிவெள்ளியே வானத்தில் எழுந்துவிடும்; (இதுவும் ஒரு சத்திரமோ? என்பது குறிப்பு" இதனைக் கேட்ட சத்திரத்தினர் காத்தானிடம் சென்று இந்தப் பாடலைச் சொன்னார்கள். அவன்செய்தியைப் புரிந்து கொண்டான். திருத்தங்களை உடனே செய்தான். காளமேகத் தி. மும் வந்து, தன்னைப் பொறுத்தருளும்படி வேண்டினான். அப்போது, கவிஞர் அவனுடைய மனமாற்றத்தைப் பாராட்டியவ ராகப் பொருளினை மாற்றி உரைத்து அவனை மனமகிழுமாறு செய்கின்றார். குமுறுகின்ற கூழ்! வீரசென்னன் என்பவனின் நாட்டிலே ஒரு வடுகன் வீட்டிலே உண்ட கூழினைப்பற்றிக் கவிஞர் சொல்லிய செய்யுள் இது. ஏழாளை யடித்தபுலி தனையடித்தான் வீரசென்ன னென்றே காட்டில் வாழாமற் சிறுபுலிக ளிப்புலியோ டெலிப்புலியாம் வடிவங் கொண்டு பாழாகிக் காடெல்லாம் பரிதவிக்க வடுகரடுப் படயில் வந்து கூழாகி வயிற்றினிற் போம் பொழுது குணம் போகாமற் குமுறுந் தானே! (191) "ஏழு ஆட்களை அடித்துவிட்ட புலியினை வீரசென்னன் என்பவன் அடித்துவிட்டான் என்று கேட்டுப் பயந்து, தாமும் காட்டிலே வாழாமல், சிறிய புலியளெல்லாம் ஈப்புலியாகவும் எலிப்புலியாகவும் வடிவங்கொண்டு வந்து, காடெல்லாம் பாழ்பட்டுப் போய்ப்பரிதவிக்க, வடுகர்களின் அடுப்படியிலே வந்து கூழ்வடிவமாயின. என் வயிற்றினில் போகும்பொழுது மட்டும் தம்குணம் முற்றவும் போகாமல் அவை இரைச்சலிடுகின்றன (குமுறுகின்றன." கூழ் உண்டதனால் வயிறு இரைச்சலிடக் கவிஞர் அதனை இப்படிக் கூறுகின்றார். மறவாத சாப்பாடு பூரீரங்கத்திலே, ஒரு வீட்டிற் சாப்பிட்ட கவிஞருக்கு, அந்த மனவேதனையினைத் தாங்கவே முடியவில்லை. அந்த சாப்பாட்டின் தன்மையை நினைத்து இப்படிப் பாடுகிறார்.