பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 123 மா வடுவே - ஒரு மரத்திலே ஏராளமான மாவடுக்கள் விளங்கினதைக் கண்ட கவிஞருக்கு, மாவடு ஊறுகாயின்மேல் மனம் செல்லுகிறது. இப்படிப் பாடுகிறார், திங்க ணுதலார் திருமணம்போ லேகீறிப் பொங்குகட லுப்பைப் புகட்டியே-எங்களிட ஆச்சாளுக் கூறுகா யாகாம லாருக்காக் கர்ச்சாய் வடுகமாங் காய். - (196) "வடுக மாங்காய் - வடுகாக விளங்கும் மாங்காயே! பிறை யனைய நெற்றியினையுடைய பெண்களின் அழகான மனத்தைப் போலக் கீறி, பொங்கும் கடலினின்றுங் கிடைத்த உப்பினைப் புகட்டி, எங்களுடைய ஆச்சாளுக்கு ஊறுகாயாக ஆகாமற்படிக்கு வேறு யாருக்காகவோ நீ இப்படிக் காய்ந்திருக்கின்றாய்?" ஆச்சாள் - ஆத்தாள் என்ற சொல்லின் சிதைவு. அன்றி, ஒருத்தியின் பெயரும் ஆம் பெயரென்று கொண்டால், ஆச்சாள் படைத்த ஊறுகாயை வியந்து மாவடுவைக் கண்டபோது பாடியதாகக் கொள்க. சட்டி பானை சட்டி பானைகளைச் செய்து கொண்டிருக்கும் ஒர் இடம்: கவிஞர் அங்கே சென்று விசாரிக்கிறார்; அவள் தப்பாக புரிந்து கொண்டாள். அந்தக் கருத்தில் எழுந்த வெண்பா இது. ஆண்டி குயவா வடாவுன்பெண் டாட்டிதனைத் தோண்டியொன்று கேட்டேன் துரத்தினாள்-வேண்டியிரு கைக்கரகம் கேட்டேன் காலதனைத் தூக்கியே சக்கரத்தைக் காட்டினாள் தான். (197) "ஆண்டி என்னும் பெயரினையுடைய குயவனே! உன் பெண்டாட்டியினைத் தோண்டி ஒன்று கேட்டேன்; அவள் என்னைத் துரத்தினாள். மீண்டும் வேண்டிக் கொண்டவனாக, 'இருகைக் கரகம்’ கேட்டேன்; அவளோ, தன் இரு கால்களைத் தூக்கியவளாகச் சக்கரத்தைக் காட்டினாள்! இது ஏனோ?” தோண்டி - அல்குலையும் குடத்தையும், கைக்கரகம் - தனங் களையும், கலசங்களையும், சக்கரம் - பானைவனையும் சக்கரத்தை யும், மறைவிடத்தையும் குறிப்பன. நீர் மோர் மோர் விற்பவள் ஒருத்தி, நீரிலே சிறிது மோரையும் கலந்து மோரென்று கூறி விற்று வந்தாள். அந்த மோரின் தன்மையைக் கண்ட கவிஞர் பாடியது இது,