பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் காரென்று பேர்படைத்தாய் ககனத் துறும்போது நீரென்று பேர்படைத்தாய் நெடுந்தரையில் வந்ததற்பின் வாரொன்று மென்முலையா ராய்ச்சியர்கை வந்ததற்பின் மோரென்று பேர்படைத்தாய் முப்பேரும் பெற்றாயே. (198) "வானத்தை அடை யும்போது நீ'மேகம்' என்ற பெயரினைப் பெற்றனை நெடிதான தரையிடததே வந்ததன் பின்னர், 'நீர்' என்ற பெயரினையும் பெற்றனை. கச்சுப் பொருந்திய மென்மையான முலைகளையுடைய ஆய்ச்சியர்களின் கையிடத்தே வந்ததன் பின்னால், நீ மோர் எனவும் பெயர்பெற்றனை நீரே, நீ இப்படி மூன்று பெயர்களையும் பெற்று விட்டனையே! நின் சிறப்புத்தான் என்னே?” வதை செய்தால் மகளின் காதல் மெலிவை அணங்கு தாக்கியதென்று எண்ணி, வெறியாடலுக்குத் தாய் ஏற்பாடு செய்ய, அப்போது மகள் சொல்லுகிறதாக அமைந்தது இச் செய்யுள். போலநிற மாவார்க்குப் பூணார மாவாரை ஏலவதை செய்தால் இயல்பாமோ-சாலப் பழிக்கஞ்சுந் தென்மதுரைப் பாவையிரு நான்கு விழிக்கஞ்சன் சோமனலை வேந்து. (199) - “மிகுதியாக எழுந்த ஊரலரான பழிக்கு அஞ்சுகின்ற, தென்மதுரையிலிருக்கும் பாவைபோன்ற என் தோழியே! எட்டு விழிகளையுடைய பிரமதேவன், சந்திரன், கடல் தெய்வமாகிய வருணன் ஆகிய இவர்களைப் போன்ற பெண்களுக்கு, ஆடு முதலியவற்றைப் பலியிடுவதனால் மீண்டும் மேனி பழைய தன்மையினை அடைந்து விடுமோ?” பிரமன் வெண்ணிறத்தோன்; சந்திரன் நாளுக்கு நாள் உடல் தேய்ந்து போகின்ற தன்மையுடையவன்; வருணன் கருநீல நிறத்தவன். பிரிவினாலே உடல் வெளுத்தும், தேய்ந்தும், பசலைபடர்ந்தும் போயின நிலைமையை இப்படிக் கூறினர். சோமன், சிவனும் ஆம்; அப்போது உடலின் கொதிப்பைக் குறித்ததாகக் கொள்க. - பழிகாரா! கயற்றாற்றிலே கருட உற்சவம் நடந்து கொண்டிருந்தது. விழாவைக் கண்டு மகிழ்ந்திருந்த கவிஞரைக் கோயிலார் வற்புறுத்திச் சப்பரத்தைச் சுமக்குமாறு செய்தனர். அந்த வேதனையைத் தாளாத அவர், இவ்வாறு பாடிப் பழிக்கின்றனர்.