பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 125 பாளைமணம் கமழுகின்ற கயற்றாற்றுப் பெருமானே பழிகா ராகேள் வேளையென்றா லிவ்வேளை பதினாறு நாழிகைக்கு மேலா யிற்றென் தோளை முறித் ததுமன்றி நம்பியா னையுங்கடச் சுமக்கச் செய்தாய் நாளையினி யார் சுமப்பா ரெந்நாளும் உன்கோயில் நாசந் தானே! (200) பாளையின் மணம் கமழுகின்ற கயற்றாறு என்னும் ஊரிலே கோயில்கொண்டிருக்கும் பெருமாளே! பழிகாரனே! யான் சொல்லும் இதனையும் கேட்பாயாக வேளை என்றால் இவ்வேளை இரவு பதினாறு நாழிகைக்கும் மேற்பட்டதாக ஆகிவிட்டது. நின் வாகனத்தைச் சுமக்கவைத்து என் தோள்களை முறியச் செய்ததும் அல்லாமல், இந்த நம்பியானையும் நின்னோடு கூடச் சுமக்கும்படியாக என்னைச் செய்துவிட்டாய். இனிமேல், நாளைக்கு உன்னை எவர் சுமக்கப் போகிறார்கள்? உன் கோயில், இனி எந்நாளுமே நாசந்தான்.” இதற்குப் பின்னர் கயற்றாற்றுக் கோயிலில் திருவிழா நெடுங்காலம் நின்றுவிட்டது என்பது வரலாறு. ஏரி உடைதல்! ஏரி உடையுமாறு கவிஞர் பாடிய செய்யுள். இது ஏரியின் பெருக்கினால் ஊரும்செய்யும் பாழாகாமற் செய்ய வேண்டிய முறைகளைக் கூறுகிறார். கலங்கற் றுறையதனிர் காராளர் போதத் தெலுங்கப்ப நாரணன் தெண்டிக்கச் - சலம்பெருகி நட்டாற கொண்டுகரை நன்றா யுடைந்துநீர் கட்டா தொழிதல் கடன். (201) “காராளர்கள் கலங்கல் துறையினிடத்தே செல்லவும், தெலுங்கப்ப நாராணனானவன் வெட்டிவிடவும், எங்கணும் நீர்ப்பெருக்கெடுத்து, நட்டாற்று வெள்ளமாக எங்கும் பெருகிக் கொண்டு கரையும் நன்றாக முற்றவும் உடைந்து போக, ஏரியில் கட்டுப்பட்டிராமல் முற்றவும் நீர் வடிந்து போதலே செய்தற்கான முறையாகும்." கடையர்கள் வணிகத்தில் ஏராளமான பொருளைச் சம்பாதித்தும், அதனை நல்லோர்க்கு உதவும் மனமற்றுத் தீய வழிகளிலேயே செலவிட்டு வருகின்ற சிலரைப்பற்றிப் பழித்துக் கூறிய செய்யுள் இது.