பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கருந்தலை செந்தலை தங்கான் றிரிக்கால் கடையிற்சுற்றி வருந்திக் குடவற்கும் தாட்டிகுங் கொத்திட்டு மாய்வதல்லலால் கரந்தைக ளாண்டி லொருக்கால் வருவது கண்டிருந்தும் அரும்புக்குங் கொத்துக்கும் வந்தார் பிழைப்ப தரிதென்பரே. (202) “கருந்தலையெனவும் (கால்), செந்தலை எனவும் (அரைக்கால்), தங்கான் எனவும் (அரை), திருக்கால் எனவும் (முக்கால்) வருத்தப்பட்டுக் கடையிலே பொருளைக் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்த்து, அப்படிச் சேர்த்ததைப் பரத்தைக்கும் கூத்திக்குமாகப் பங்கிட்டு அழிவதல்லாமல் கரந்தைகள் ஆண்டிற்கு ஒருமுறை வருவதனைத் தெரித்திருந்தும், 'அம்புக்கும் கொத்துக்கும் வந்துவிட்டார்கள்; இனி நாங்கள் கடைவைத்துப் பிழைப்பதே அரிது’ என்பார்கள் இந்தக் கடைக்காரர்கள். கரந்தைகள் - அரசாங்க வரி வாங்குவோர். பாவிகள்! தண்டாங்கூர் மாசனங்காள் சற்குணர்நீர் என்றிருந்தேன் பண்டங் குறையவிற்ற பாவிகாள் - பெண்டுகளைத் தேடியுண்ண விட்டீர் தெருக்க டெருக்கடொறும் ஆடிமுத லானிவரைக் கும். (203) தண்டாங்கூர் என்ற ஊரிலே, ஒர் ஒருந்தாயக் காலத்திலே, வியாபாரிகள் பண்டங்களை அநியாயமான விலைக்கு விற்றுக் கொண்டிருந்தார்கள். அதனைக் கண்டு மனம் வெதும்பிப்பாடியது இது. 'தண்டாங்கூர் என்னும் ஊரிலே இருக்கின்ற மிகவும் பெரிய - மனிதர்களே! (நீங்கள் அனைவருமே நல்ல குணம் உடையவர்கள்; என்று நான் இதுவரை எண்ணியிருந்தேன். பண்டங் கறைய விற்ற பாவிகாள் - பொருள்களைப் பெற்ற விலையின் அளவுக்கேற்பக் கொடாமல் அளவைக் குறைத்து விற்ற பாவிகளே! ஆடி முதல் ஆனிவரைக்கும் - அதாவது ஆண்டு முழுவதும் பெண்களைத் தேடியுண்ண விட்டீர் பெண்களைப் பொருள் தேடி உண்ணுமாறு கைவிட்டீர்களே? (நீங்கள் உருப்படுவீர்களா?” அகவிலை அதிகரித்ததால் பெண்கள் உணவுக்காகப் பொருள் தேட முனைந்த கொடுமையை எடுத்துக் காட்டிக் கடைக் காரர்களைப் பழிக்கிறார் கவிஞர், 'கொள்ளை இலாபம் வைத்து விற்கும் பெரிய பெரிய மனிதர்களும், பதுக்கல்காரர்களும் இச்செய்யுளை நன்றாகக் கவனிக்க வேண்டும்.