பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் ஆமூர் முதலியார் முன் ஒரு செய்யுளிலே, ஆமூரிலுள்ள திருவேங்கட முதலியாரின் குதிரையைச் சிறப்பித்த கவிஞரின் செய்யுளை அறிந்தோம். அவருடைய கொடைச் சிறப்பைப் புகழ்ந்தது இது. உள்ளங்கால் வெள்ளெலும்பு தோன்ற வொருகோடி வெள்ளங்கா லந்திரிந்து விட்டோமே-உள்ளபடி ஆமூர் முதலி யமரர்கோ னிங்கிருப்பப் போமூர் அறியாமற் போய். - (206) “ஆமூரின் முதலியாகிய அமரர்கோமான் போன்றவன் இங்கே இருக்கவும், போவதற்குரிய ஊர் இதுவென முதலிலேயே அறியாதபடி பல ஊர்கட்கும் நடந்துபோய், உள்ளங்காலிலே வெள்ளெலும்பு தோன்றும்படியாக, ஒரு கோடி வெள்ளங்காலம் வீணாகப் பலவூரும் சுற்றி அலைந்து விட்டோமே!” “ஆமூர்க் களப்பாளனைப் பாடிய செய்யுளெனவும் இதனைச் சொல்வார்கள். ஒருகோடி வெள்ளம் - பன்னெடுங் காலம்; கோடி என்பதும் வெள்ளம் என்பதும் பேரெண்கள் ஆகும். பண்பின் தகுதி பண்புடையவர் பண்பற்றவர், பாவிகள் பாவஞ் செய்யாதவர், நண்பர் நண்பரல்லார் இவர்களை நாம் கொள்ளவேண்டிய முறைமைகளைப் பற்றிப் பாடிய செய்யுள் இது. இது, மதுரையிற் சொல்லியது. - பண்புளருக் கோர்பறவை பாவத்திற் கோரிலக்கம் நண்பிலரைக் கண்டக்கா னாற்காலி-திண்புவியை ஆள்வார் மதுரை யழகியசொக் கர்க்கரவம் நீள்வா கனநன் னிலம். (207) "பண்புள்ளவர்களுக்கு ஒர் பறவை (அது ஈ - கொடு); பாவத்திற்கு ஒர் இலக்கம் (அது அஞ்சு - பாவத்திற்கு அஞ்சி ஒதுங்க வேண்டும் என்பது கருத்து); நண்பில்லாதவரைக் கண்டால் நாற்காலி - (அது விலங்கு - விலகிப் போய்விடு) என்பது பொருள். செறிவுற்ற நிலத்தினை எல்லாம் ஆட்கொள்பவராகிய மதுரை நகரத்து அழகியசொக்கநாதப் பெருமானுக்கு நிலையாகப் (அரவம் வாகனம் நன்னிலம் என்க) பணிவிடை செய்” பண்பாளர்க்குக் கொடுத்தும், பாவத்திற்கு அஞ்சியும், பகைவரிடத்திலிருந்து விலகியும், சொக்கநாதப் பெருமானுக்குப் பணிவிடை செய்தும் வாழ்வாயாக என்பது கருத்து.