பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 129 'ஓர் பறவை' என்பதனை, ஒப்பற்ற பறவை' எனப் பொருள் கொண்டால், 'அன்னம்' என்றாகிச் சோறிடுதலைக் குறித்ததாக அமையும். வாழ்க! வாழ்க! ஒரு திருமண வீட்டிலே திருமாலடியார்களும் சிவனடியார் களும் குழுமியிருந்தனர், மணமக்களை வாழ்த்துகிறார் கவிஞர். இரு சாராரின் மனமும் புண்படாதபடி உரைக்கின்ற சிறப்பினைக் காண்க. சாரங்க பாணியா ரஞ்சக்கரத்தல் கஞ்சனைமுன் ஓரங்கங் கொய்த உகிர்வாளர்-பாரெங்கும் ஏத்திடுமை யாக ரினிதா யிவரும்மைக் காத்திடுவ ரெப்போதும் காண். (208) சிவ பரமாக: சாரங்கபாணியார் - மானேந்திய கையினர்; அஞ்சு அக்கரத்தர் - பஞ்சாட்சர சொருபமானவர், கஞ்சனை முன் ஒரங்கம் கொய்த உகிர்வாளர் - தாமரை வாசனாகிய பிரமனை முன்காலத்திலே ஒரு தலையினைக் கிள்ளிய நகத்தினை உடையவர்; பார் எங்கும் ஏத்திடும் உமை ஆகர் - உலகமெல்லாம் போற்றுகின்ற உமையம்மையைத் திருமேனியிற் பாதியாகக் கொண்டிருப்பவர்; இவரும்மை எப்போதும் காத்திடுவர் காண் - இத்தகைய ஈசர் உங்களை எந்நாளும் காத்திடுவாராக காண்’, அசை. திருமால் பரமாக : சாரங்க; பாணியர் - சாரங்கம் ஆகிய வில்லினைக் கைக்கொண்டவர்; அஞ்சக்கரத்தர் - அழகிய சக்கரப் படையினை உடையவர்; முன் ஒர் அங்கம் கொய்த உகிர்வாளர் மாமனாகிய கஞ்சனை முன்னாளிலே ஒப்பற்ற உடலைக் கிழித்த நகத்தினையுடையவர்; பார் எங்கும். ஏத்திடும் மையாகர் - உலகெங்கும் போற்றிடும் கரிய திருமேனியுடையவர்; திருமா லாகிய இவர் உம்மை எப்போதும் காத்திடுவாராக! இருவகையினரும் உவக்குமாறு பொருளை விரித்துாைத்துக் காளமேகம் அவர்களை மகிழ்வித்தனர் என்க. மதுரைக்கு எவ்வாறு சென்றீர்! "ஞானவரோதயர்' என்பவர் திருச்சிராப்பள்ளிக்கு மேற்கேயுள்ள வயலூர் என்னுமிடத்தில் வாழ்ந்த சிவசமயத் துறவியாராவார். தமிழ் வடமொழி என்னும் இரண்டினும் வல்லவராகவும், சித்தாந்த புராண நூல்களுள் ஆழ்ந்த புலமையும் தெளிவும் உடையவராகவும் இவர் விளங்கினார்.