பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் 'சிவபெருமானின் நெற்றிக் கண் நெருப்பிலே பட்டு எரிந்துபோன காமகேவரே! இவள் இடையோ செக்குப் போலப் பருத்திருக்கிறது. இவள் மார்பகங்களோ சிறு பயற்றின் அளவாகச் சிறுத்துள்ளன. சிக்குப் பிடித்த இவள் கூந்தல் வைக்கோற் கற்றைக் கழித்துப் போட்டாற் போலத் தோன்றுகின்றது. விழிகள் இருக்க வேண்டிய இடத்திலே குழிகள் விளங்குகின்றன. குளங்கள் தோறும் கொக்குகள் சென்று மீன்களை மேய்ந்து கொண்டிருக்கும் குடவாசல் நகரத்திலே இவ் விண்ணாளும் இப்படித் தோன்று கின்றாள். மலையகத்துக் காணப்படும் ஒணானைப் போன்றவரே! எதற்காகத்தான் இவளையும் பெண்ணென்று படைத்திரோ? செய்யுளைக் கேட்டதும் விண்ணாள் சிரித்துவிட்டாள். அழகிற் சிறந்த அவளுக்குக் கவிஞர் பாடிய வசைப்பாடல் வேடிக்கையாகவே இருந்தது. புலிக்குட்டிச் சிங்கன் புலிக்குட்டிச் சிங்கன் என்பவன் ஒரு செல்வனாக இருந் திருக்கவேண்டும். இத்துடன் தான் புலவன் என்று செருக்கியும் திரிந்தான். இவன் காளமேகத்தை மதியாது போக, அதனாற் கவிஞர் அவன்மீது வசையாகப் பாடிய செய்யுள் இது.புலிக்குட்டிச் சிங்கனைக் காதலித்து, அவனுடன் போய் விடுகின்றாள் ஒரு பெண். அவனுடைய இழிந்த மனத்தை அறியாது, தன் பேதைமையால் அறிவிழந்த அவள், சில நாட்களில் அவனாற் கைவிடப் பெற்றுத் தாய் வீட்டிற்குத் திரும்புகின்றாள். அவளுடைய உருக்குலைந்த தோற்றத்தைக் கண்டதும் அவளுடைய தமையனின் மனம் கொதிக்கின்றது. புலிக்குட்டிச் சிங்கனின் ஈனத்தனத்தை அறியாமல், சொன்னாலும் கேளாமல் சென்று மானமிழந்து வந்து நிற்கும் தங்கையைக் கண்டதும் அவன் குமுறுகின்றான், இந்தப் பாங்கிலே செய்யுள் நடக்கிறது. போன போன விடந்தொ றுந்தலை பொட்டெ ழப்பிறர் குட்டவே புண்ப டைத்தம னத்த னாகிய பொட்டி புத்திர னத்திரன் மான வீனணி லச்சை கேடனொ ழுக்க மற்றபு ழுக்கையன் மாண்ப னாம்புலிக் குட்டிச் சிங்கன் வரைக்கு ளேறியி றங்குவீர் பேணு மீருமெ டுக்கவோ சடை பின்னி வேப்பெணெய் வார்க்கவோ பிரிவி ழிக்கரி யெழுத வோவொரு பீறு துண்டமு டுக்கவோ