பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் திருமலைராயனின் சிறப்பு தமிழ் நாவலர் சரிதை, இச் செய்யுளைக் காளமேகம் பாடியதென்று காட்டும். மூன்று நான்காவது அடிகளிற் சில மாறுதல்களுடன் இதனைச் சொக்கநாதப் புலவர் பாடியதாகவும், சாளுவக் கோப்பையன் புதல்வனான திப்பையராயன் என்பவனைக் குறித்ததாகவும் சிலர் கொள்வார்கள். காளமேகம் செய்ததாகவே ஏற்றுக்கொண்டு நாம் பொருளைக் காண்போம். இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான் அக்கினி யுதரம்விட் டகலான் எமனெனைக் கருதா னரனெனக் கருதி நிருதிவந் தென்னையென் செய்வான் அந்தமாம் வருண னிருகண்விட் டகலான் அகத்துறு மக்களும் யானும் அனிலம தாகு மமுதினைக் கொள்வோம் யாரெனை யுலகினி லொப்பார் சந்தத மிந்த வரிசையைப் பெற்றுத் தரித்திர ராசனை வணங்கித் தலைசெயு மென்னை நிலைசெய்கல் யாணிச் சாளுவத் திருமலை ராயன் மந்தர புயனாங் கோப்பய னுதவு மகிபதி விதரண ராமன் வாக்கினாற் குபேர னாக்கினால் அவனே மாசிலா வீசனா வானே. (6) இந்திரன் கலையாய் என் மருங்கு இருந்தான் - ஆயிரங் கண்ணனான இந்திரன் ஆடையாக உருவெடுத்து என்இடையிலே அமைத்திருந்தான் (அதாவது, உடுத்துள்ள உடையிலே ஒராயிரம் பொத்தல்கள்), அக்கினி உதரம்விட்டு அகலான் - நெருப்புக் கடவுளான அக்கினியோ என் வயிற்றைவிட்டு அகலாதேயே நிலைத்திருக்கின்றான் (அதாவது, வயிற்றிடத்தே பசித்தீ அகலாது நிலைபெற்றிருக்கிறது); அரன் எனக் கருதி எமன் எனைக் கருதான் - சிவபெருமானே எனநினைத்து எமனும் என்னை நினைக்கமாட்டான் (பிச்சை ஏற்று உண்ணலால், பிட்சாடன மூர்த்தியாகிய சிவன் என்று எமன் நினைத்து என் உயிரைக் கவர்தற்கு நினையாதே இருக்கின்றான்); நிருதி வந்து என்னை என் செய்வான் - காற்று வந்து மோதினாலும் என்னை என்ன செய்துவிடுவான் (உடல் மிகவும் மெலிந்துபோயின தன்மையை இப்படிக் குறித்தார். காற்று மோதி ஏதும் செய்ய வியலாது என்றதனால்); ... •