பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் தாமரையின் அயன் ஒடிச் சத்தியலோகம் புகுந்தான் - தாமரை வாசனாகிய பிரமன் அஞ்சி ஒடிச் சத்தியலோகத்திலே நுழைந்து கொண்டான்; சங்கபாணி பூமிதொட்டு வானம் மட்டும் வளர்ந்து நின்றான் - சங்கை ஏந்தியவனான திருமால் நிலமுதல் வானம் வரை மேனி வளரப்பெற்று விசுவரூபியாகி நின்றான்; சிவன் கயிலைப் பொருப்பிலேறிச் சோமனையும் தலைக்கணிந்து வடவரைத் தண்டால் ஆழம் சோதித்தானே - சிவபிரான் கயிலை மலைமேல் ஏறிக் கொண்டு சோமனையும் (சந்திரன், ஆடை) தலையில் அணிந்தவனாக, இமயமலையாகிய தண்டினாலே இமயமலையிடத்து மூங்கிலும் ஆம்) அக்கீர்த்த வெள்ளத்தின் ஆழ்த்தை சோதிக்கத் தொடங்கினான். திருமலைராயனின் புகழ்வெள்ளம் முத்தேவரையும் அஞ்சச் செய்யும் அளவிற்குச் சிறந்ததாயிருந்தது என்பது கருத்து. திருலைராயனின் வாள் அரசர்களை அவர்களுடைய ஆயுதங்களைப் போற்றுவதன் மூலமும் புகழ்வது மரபு. அந்த மரபின்படி திருமலைராயனின் வெற்றிவாளைக் குறித்து இவ்வாறு பாடுகிறார். செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில் வெற்றிபுரி யும்வாளே வீரவாள்-மற்றையவாள் போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள் ஆவா னிவாளவா ளாம். (8) செற்றலரை வென்ற பகைகொண்டுவந்து எதிர்த்தவர்களை வெற்றிகொண்ட, திருமலைராயன் கரத்தில் விளங்க அந்த வெற்றியைச் செயற்படுத்தும் வாள் ஒன்றே வீரவாள் என்பதற்குப் பொருந்துவதாகும்; மற்றையவாள் - வாள் என்று முடியும் பிறவெல்லாம், போவாள் வருவாள். புகுவாள், புறப்படுவாள், ஆவாள் இவாள் அவாள் என்ற சொற்கள், வாள் என முடிந்தம் எப்படி வாளைக் குறிப்பதாகாதோ, அப்படியே வாள் என வழங்கினும் பயன் அற்றவைகளாம். இது, திருமலைராயனின் போராற்றலைக் காட்டுகின்றது. அவன், போர்கள் பலவற்றை நடத்தி வெற்றி பெற்றவன் என்பதும் தெரிகின்றது. தம் கவித்திறம் கூறியது அதிமதுரக் கவிராயர் தம்முடைய கவித்திறத்தை எடுத்துக்கூறிப் பெருமை பாராட்டிக் கொண்டார். தம்முடைய கவித்திறம் அவர்க்கும் அதிகம் எனக் கவிராயர் அப்போது அதிமதுரத்திற்கு எதிரிட்டுக் கூறியது இந்தச் செய்யுள்