பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 9 இம்மென்னு முன்னே எழுநூறும் எண்ணுாறும் அம்மென்றால் ஆயிரம்பாட்டாகாதோ-சும்மா இருந்தா லிருந்தே னெழுந்தேனே யாமாயின் பெருங்காள மேகம் பிளாய்! (9) இம் என்னும் முன்னே எழுநூறும் எண்ணுறும் இம் என்று சொல்வதற்கு முன்னே எழுநூறு எண்ணுாறு பாடல்களும். 'அம்' என்றால் ஆயிராம் பாட்டாகாதோ. 'அம்' என்று அடுத்துச் சொன்னால் அதற்குள் ஆயிரம் பாட்டுகளும் ஆகிவிடாதோ? பிளாய் - சிறுவனே! (அதிமதுரத்தை நோக்கிக் கூறியது) சும்மா இருந்தால் இருந்தேன் சும்மா இருந்தேனாயின் இருப்பேன், எழுந்தேனே யாமாயின்பெரும் காளமேகம் சும்மா இருந்தாலும் இருப்பேன். பாடத் தொடங்கினேனானால் பெரிய கார் மேகமாகப் பொழிவேன் (என்று அறிவாயாக) 'பிளாய்' என்ற சொல்லின் பிரயோகத்தைக் கவனிக்கவும். தம் கவிவன்மைக்கு எதிரே அதிமதுரம் சிறு குழந்தை என்று கூறியதும் ஆம் வால் எங்கே? திருமலைராயன் அவையிலிருந்த சிலர் தம்மைக் கவிராயர்கள் என்று கூறிச் செருக்குடன் வீற்றிருந்தனர். அப்போது, அவர்களை ஏளனமாகச் சுட்டிப் பாடியது இச் செய்யுள். வாலெங்கே நீண்ட வயிறெங்கே முன்னிரண்டு காலெங்கே உட்குழிந்த கண்ணெங்கே-சாலப் புவிராயர் போற்றும் புலவீரகா னிவிர் கவிராயர் என்றிருந்தக் கால். (10) புவிராயர் சாலப் போற்றும் புலவீர்காள் - நாடாள்வோர் மிகுதியாகப் போற்றுகின்ற புலவர்களே! நீவிர் கவிராயர் என்றிருந்தக்கால் நீங்கள் கவிராயர்களாக (குரங்குத் தலைவர் களாக) இருந்தவிடத்து, வால் எங்கே-நும்முடைய வால்கள் எங்கே போயின, நீண்ட வயிறு எங்கே நீண்ட வயிறுகள் எங்குச் சென்றன, முன் இரண்டு கால் எங்கே - முன் பாகத்தே இருக்கவேண்டிய இரண்டு கால்களும் எங்கே, உட்குழிந்த கண் எங்கே உள்ளே குழிந்ததாயிருக்கும் கண்கள் எவ்விடத்தே போயின? (கவி குரங்கு வட சொல்லான கபி யின் தமிழ் அமைப்பு) (ஆகவே; நீங்கள் கவிராயர்கள் அல்லர். நீங்கள்பொய் பேசுபவர்கள்’ என்று கூறி, அவர்களை நகையாடிய தாயிற்று.