பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நீறாவாய் நெருப்பாவாய் "சிவபெருமானைக்குறித்த ஒரு செய்யுள்; அதனிடத்தே நீறாவாய், நெருப்பாவாய், கூறாவாய், கொளுத்துவாய், நட்ட மாவாய், நஞ்சமாவாய் என்று அவனைப்பற்றிச் சொல்ல வேண்டும் பாடுக பார்ப்போம்” என்றார் ஒரு புலவர். அப்படியே அரைவினாடியில் அவ்வாறு சொற்கள் பொருள் நயத்துடன் அமைந்துவரப் பாடி, முடிவிலே, அப் பெரு மான் அத்தகையவனே எனினும், அன்பரைக் கருணை பாலிக்கும் கருணையாளனும் ஆவான் என்று சொல்லும் வகையினாலே, அவன் தன்னைக் காக்குமாறும் வேண்டுகின்றார் கவிஞர். நீறாவாய் நெற்றி நெருப்பாவாய் அங்கமிரு கூறாவாய் மேனி கொளுத்துவாய்-மாறாத நட்டமா வாய்சோறு நஞ்சாவாய் நாயேனை இட்டமாய்க் காப்பா யினி. (14) நெற்றி நீறுஆவாய் - நெற்றியினிடத்தே திருநீற்றினை உடையை ஆவாய், அங்கம் நெருப்பு ஆவாய் - திருமேனி நெருப்புமயமாக அமைந்திருப்பாய், மேனி இரு கூறாவாய் - நின் திருமேனி இருகூறாக அமைந்திருப்பாய், கொடுத்துவாய் - எரி நெருப்பாகவே விளங்குவாய், மாறாத நட்டம் ஆவாய் - இடையீ டில்லாத நடனத்தையும் உடையை ஆவாய், நஞ்சு சோறு ஆவாய் - நஞ்சினைத் சோறாகக் கொள்வோனும் ஆவாய், (அங்ங்னம் நீ வெம்மையுடனேயே விளங்குபவன் ஆயினும்) இனி நாயேனை இட்டமாய்க் காப்பாய் - இனி, நாயினேனையும் விருப்பமுடன் காத்தருள்வாயாக. குடத்திலே கங்கை அடங்கும் குடம் ஒரு சிறு பாத்திரம். கங்கை நதியோ பிரவாகமாகப் பெருகி வருவது. அது, எப்படிச் சின்னஞ் சிறிய குடத்திலே அடங்க முடியும்? குடத்திலே கங்கை அடங்கும், என்ற ஈற்றடி வருமாறு ஒரு வெண்பாப் பாடும் என்று சொல்லுகிறார் ஒருவர். காளமேகம், புலவர் கொடுத்த சமிக்ஞையை எண்ணிப் பார்த்தார். சொற் சாதுரியத்தினாலே அவர் கேட்டபடியே பாடுகின்றனர். விண்ணுக் கடங்காமல் வெற்புக் கடங்காமல் மண்ணுக் கடங்காமல் வந்தாலும் - பெண்ணை இடத்திலே வைத்த இறைவர் சடாம குடத்திலே கங்கை யடங்கும் (15) கங்கை - ஆகாய கங்கையானது, விண்ணுக்கு அடங்காமல் வானத்திடத்தே அடங்காமலும், வெற்புக்கு அடங்காமல்’ இமயமலையிடத்தே அடங்காமலும், மண்ணுக்கு அடங்காமல் -