பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் முக்கண்ண னென்றரனை முன்னோர் மொழிந்திடுவர் அக்கண்ணற் குள்ள தரைக்கண்ணே-மிக்க உமையாள் கண் னொன்றரைமற் றுன்வேடன் கண்னொன் றமையுமித னாலென் றறி. (17) "பெருமான் உமையொருபாகன். அதனால் முக்கண்களிற் பாதியான ஒன்றரைக் கண் அம்மைக்கு உரியதாகும். காளத்தி நாதர்க்கு, ஒரு கண் கண்ணப்ப நாயனாரால் அப்பி வைக்கப் பெற்றது. இரண்டையும் கருதினால் எஞ்சிச் சொந்தமாக இருப்பது எல்லாம் அரைக்கண்தானே! இவ்வாறு பொருத்தமாகப் பாடி அனைவரையும் வியப்பிலே ஆழ்த்துகிறார் கவிஞர். அரனை ‘முக்கண்ணன்' என்று முன்னோர் மொழிந்திடுவர். சிவபெருமானை மூன்று கண்களையுடைய பெருமான் என்று முன்னோர்கள் சொல்வார்கள், அக் கண்ணற்கு உள்ளது அரைக் கண்ணே - மாலையினை அணிவோனான அப்பெரியோனுக்கு உள்ளதெல்லாம் அரைக் கண்ணேயாகும், (எவ்வாறு என்றாலோ?) மிக்க உமையாள் கண் ஒன்றரை - மேலானவனான உமையம்மைக்கு உரிமையுடைய கண் ஒன்றரையாகும். மற்று - பின்னும், ஊன் வேடன் கண் ஒன்று ஊனுண்போனாகிய வேடனாம் கண்ணப்பன் அப்பி வைத்த அவனுடைய கண் ஒன்றாகும்; இதனால் அமையும் என்று அறி-இத் தன்மையினாலே பெருமானுக்குச் சொந்தமானது, அரைக்கண் என்பதே பொருந்தும் என்று அறிவாயாக. சிதம்பர தேவா 'சிதம்பர தேவா என்று நான்குதரம் வருதல் வேண்டும். அங்ங்னம் அமையுமாறு ஒரு வெண்பாக் கூறுக’ என்றார் ஒரு புலவர். கவிஞர் அரைநொடியிலே பாடி அவரைத் திகைக்கும்படி செய்கிறார். அரகர திருச்சிற் றம்பல வாணாவந் தரரூப மகேச சிதம் - பரதே வசிதம் பரதே வசிதம் பரதே வசிதம் பரதே வனே. (18) அரகர திருச்சிற்றம்பல வாணா - அரகரா திருச்சிற்றம்பலம் உடைய பரமனே அந்தர ரூப ஆகாயமாம் திருமேனியினை உடை யோனே! மகேச மகேஸ்வரனே சிதம்பர தேவ - சிதாகாயத்து உள்ள பெருமானே! சிதம்பர தேவ! சிதம்பரதேவ! சிதம்பர தேவனே! *. அரன் - சங்கரிப்பவன். சிற்றம்பலம் - சிற்சபை சிதம்பரத்தே உள்ளது; சிதம்பரம் சிற்றம்பலம் என்பதன் மரூஉ - மகேசன். t