பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 17 கொட்டைப்பாக் கும்மொருகண் கூடையைப்பாக் கும்மடியில் பிட்டைப்பாக் கும்பாகம் பெண்பார்க்கும் - முட்ட நெஞ்சே ஆரணனும் நாரணனும் ஆதிமறை யுந்தேடும் காரணனைக் கண்டுகளிப் பாக்கு. (22) இப்படி அகங்காரம் கொள்ளாமல், சிவபெருமானைத் தரிசிப்பதிலே மனம் செலுத்துவாயாக என்று சொல்லுபவரைப் போல உரைத்தார் கவிஞர். இதன் பொருள்: நெஞ்சே, மனமே! கொட்டைப் பாக்கும் - மதுரையிலே வந்தபின் ஏவற்படி மண்சுமக்கச் சென்று மண்வெட்டியைப் பார்த்திருந்தோனும், ஒரு கண் கூடையைப் பார்க்கும் ஒரு கண்ணினாலே கூடையைப் பார்த்தோனும், மடியில் பிட்டைப் பாக்கும் தன் மடியிலுள்ள பிட்டினை நோக்குவோனும், பாகம பெண் பார்க்கும் தன் இடப்பாகத்துள்ள தேவியைப் பார்ப்போனும், ஆரணனும் நாரணனும் ஆதிமறையும் தேடும் பிரமனும் திருமாலும் ஆதிப்பழமறையும் தேடிக் கொண்டிருப் போனுமான, காரணனை - சர்வ காரணனாகிய பரமசிவனை, கண்டு தரிசித்து, முட்டக் களிப்பு ஆக்கு முற்றவும் மகிழ்தலைச் செய்வாயாக. பார்க்கும் என்று சொல் பாக்கும் என மருவியது. கரியும் உமியும் - ‘கரி என்று தொடங்கி உமி என்று முடியும்படி ஒரு வெண்பாச் சொல்லுக' என்றனர் ஒருவர். அதனை ஏற்றும் பாடிய வெண்பா இது. கரியதனை யேயுரித்த கையா வளையேந் தரியயற்கும் எட்டாத வையா - பரிவாக அண்ட ரெல்லாம்கூடி யமுதம் கடைந்தபொழு துண்டநஞ்சை இங்கே உமி. (23) கரியதனையே உரித்த கையா - யானையையே உரித்த கையினை உடையவனே! வளையேந்து அரி அயற்கும் எட்டாத ஐயா சங்குதனை ஏந்துவானானா திருமாலுக்கும் அயனுக்கும் எல்லைகாண முடியாதிருந்த ஐயனே! அண்டர் எல்லாம் பரிவாகக் கூடி அமுதம் கடைந்த பொழுது தேவர்கள் எல்லாரும் விருப்பமுடனே ஒன்றுகூடி அமுதம் கடைந்த அந்த நாளிலே, உண்டநஞ்சை இங்கே உமி-நீஅவர்களைக் காக்கும் பொருட்டாக உண்ட அந்தக் கொடிய நஞ்சினை இவ்விடத்தே உமிழ்ந்து விடுவாயாக. 'ஐயா என்றது அனைவருக்கும் தந்தையாவான் அவனே என்ற உரிமை பற்றியும், அவன் அழகனும் தெய்வத்தன்மை உயைடவனும் ஆதல்பற்றியும் ஆகும்.