பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் 'அந்த நஞ்சை இவ்விடத்தே உமிழ்க’ என்றதனால், தேவர் களை அழியாது காக்குவே நீ நஞ்சினை உண்டனை; இவர்கள் அகங்காரங் கொண்டோர் ஆயினர்; அதனால் இவர்கள் அழியுமாறு இவ்விடத்தே அதனை உமிழ்க என்று உரைத்ததும் ஆம். - சீத்துப் பூத்து 'சீத்துப் பூத்து' என்று வரும்படி ஒரு வெண்பாவைச் சொல்லுக' என்று கேட்டார் ஒருவர். அப்படியே உரைக்கும் கவிஞர், சிவபெருமானின் திருமுடிமேல் விளங்கும் பிறையை நோக்கி, அவன் ஆபரணமான பாம்பு எப்பொழுதும் சீத்துப் பூத்தென்று சீறிக்கொண்டிருக்கும் என்று கற்பித்துப் பாடினார். அதேபோன்று ‘வானத்துப் பிறைபோல விளங்கும் எம்மை நோக்கி நச்சரவமான நீரும் சீத்துப் பூத்தென்கின்றீர்” என்று பழிப்பது போன்றமைந்த உட்பொருளையும் அறிக. அப்பூருஞ் செஞ்சடைமேல் அம்புலியைப் பார்த்துப்பார்த் தெப்போதும் சீத்துப்பூத் தென்னவே - முப்போதும் வாலங்காட் டாநிற்கும் வாயங்கா வாநிற்கும் ஆலங்காட் டான்பூண் அரா. (24) ஆலங்காட்டான் பூண் அரா - திருவாலங்காட்டிலே கோயில் கொண்டிருக்கும் எம்பெருமான் பூண்டிருக்கும் பாம்பானது;அப்பு ஊறும் செஞ்சடைமேல் அம்புலியைப் பார்த்துப் பார்த்து - கங்கை தங்கியிருக்கும் செஞ்சடையின் மேலாக விளங்கும் இளம் பிறையைப் பார்த்து எப்போதும் சீத்துப் பூத்தென்னவே முப்போதும் அங்கு வால் ஆட்டா நிற்கும் - எப்பொழுதும் சீத்துப் பூத்தென்று முக்காலும் அவ்விடத்தே வாலாட்டிக் கொண் டிருக்கும்; வாய் அங்காவா நிற்கும் வாயினைப் பிளந்தவாறும் இருக்கும். அராவின் அறியாமைக்குக் கேட்டவரின் அறியாமை உவமையாக ஆயிற்று. முக்கால் முதல் கீழரை வரை 'முக்கால் முதல் கீழரை வரை வரிசை முறை அலங்காரமாக ஒரு வெண்பாப்பாடுக என்றனர் ஒருவர். கச்சி ஏகாம்பர நாதரைப் போற்றுமுகத்தால் அங்ங்னமே பாடுகின்றார் கவிஞர். முக்காலுக் கேகாமுன் முன்னரையில் வீழாமுன் அக்கா லரைக்கால் கண்டஞ்சாமுன்-விக்கி இருமாமுன் மாகாணிக் கேகாமுன் கச்சி ஒருமாவின் கீழரையின் றோது. (25)