பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 19 முக்காலுக்கு ஏகா முன் - முதுமைப் பருவம் வந்தடைய அதனால் தடியும் கைக்கொள்ள நேரிடலாகிய மூன்று கால்களாகித் தோன்றும் நிலைமைக்குச் செல்வதற்கு முன்பாகவே, முன் நரையில் வீழா முன் - அதற்கு முற்படவே நரைவிழுதலான தளர்ச்சிப் பருவத்தில் வீழ்வதற்கு முற்பட்டதாகவே, அக்காலரைக் கால் கண்டு அஞ்சாமுன் - அக்காலத்து உயிர் கவர்வதற்கு என வருகின்றவரான எமது தர்களைக் கண்டு அஞ்சிக் கால்கள் நடுநடுங்குவதற்கு முன்பாகவே, விக்கி இருமாமுன்-விக்கல் எடுத்து இருமத் தொடங்குவதற்கு முன்பாகவே, மா காணிக்கு ஏகாமுன் பெருநிலம் என்று சொல்லப்படும் சுடுகாட்டிற்குப் புறப்பட்டுச் செல்வதற்கு முன்பாவே, கச்சி ஒரு மாவின் கீழரை இன்று ஒது காஞ்சிபுரத்திலே ஒப்பற்ற மாமரத்தின் கீழாக வீற்றிருக்கும் ஏகாம்பர நாதரை இன்றே போற்றி வழிபடத் தொடங்குவாயாக முக்கால், அரை, கால், அரைக்கால், இருமா, மாகாணி, ஒருமா, கீழரை என வந்தமை கண்டு இன்புறுக சிலேடைப் பொருள் நயத்தையும் அறிக. ஒரு வெண்பாவில் ஐந்து 'டு' "ஒரு வெண்பாவிலே ஐந்து 'டு வருமாறு பாடுக” என்றார் ஒருவர். பொருள் அமைதி சிறப்பாக இருத்தல் வேண்டும் எனவும் அவர் கூறினார். ஒகாமா விதோடு நெரொக்க டுடுடுடுடு நாகார் குடந்தை நகர்க்கிறைவர்-வாகாய் எடுப்பர் நடமிடுவர் ஏறுவரன் பர்க்குக் கொடுப்ப ரணிவர் குழை. (26) என்ற உடனே பாடினார் காளமேகம். இதன் பொருள்: நாகு ஆர் குடந்தை நகர்க்கு இறைவர் - இளமரச் சோலைகள் நிறைந்த திருக்குடந்தை நகர்க்கு இறைவரான சிவபெருமான், ஒகாமா வீதோடு டுடுடுடுடு நேர் ஒக்க, ஒ, கா, மா, வீ, தோ என்னும் ஐந்து எழுத்துக்களையும் டுடுடுடுடு என்னும் ஐந்து எழுத்துக்களுடனும் முறையே பொருந்துதலால் (வரும் சொற்கள் ஒடு, காடு, மாடு, வீடு, தோடு); வாகாய் எடுப்பர்; நடமிடுவர்; ஏறுவர்; அன்பர்க்குக் கொடுப்பர் அணிவர் குழை - அழகாகத் திருவோட்டினை ஏந்து பவர், காட்டிடத்தே நடம் புரிபவர், மாடாகிய வெள்ளேற்றின் மீது ஏறுபவர், அன்பர்க்கு வீடாகிய முக்தியைக் கொடுப்பவர் குழையாகிய காதணியைக் காதிலே தரிப்பவர் ஆவர். "நாகார்’ என்பதற்குச் சங்கினம் நிறைந்த' எனவும் சொல்லலாம். நாகேசுவரரைக் குறிப்பதாயின் நாகங்கள் ஆர்ப் பரிக்கும் எனலும் பொருந்தும் அது, இறைவன் நாகாபரணனாக விளங்குதலால் என்றும் அறிக