பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 21 மெச்சுபுகழ் வேங்கடவா வெண்பாவிற பாதியிலென் இச்சையிலுன் சென்மம் எடுக்கவா-மச்சாகர் மாகோலா சிங்காவா மாராமா ராமாரா மாகோபா லாமாவா வாய். (28) புகழ் பெருமானின் கீர்த்திகள், மெச்சுதல்-ஆன்றோர்களின் போற்றுதல்களைக் குறித்தது. வேங்கடவன் - வேங்கடமாம் திருப்பதியிலே கோயில் கொண்டிருப்பவன். கூர்மம் - ஆமை. கோலம் - பன்றி. சிங்கம் - நரசிங்கம், வாமநம குறள் வடிவம். மா - குதிரை ஆவாய் என்றது இனி வரப்போவதைக் குறித்தது. ஈயேற மலை குலுங்கும் ஒரு புலவர் கொஞ்சம் குறும்புக்காரர், அவருடைய சிந்தனை அந்தப் பாதையிலேயே சென்றது"ஈயேற மலை குலுங்கும்" என்ற கருத்துடன், ஆனால் பொருள் நயமுள்ளதாக ஒரு வெண்பாவைச் சொல்ல முடியுமோ? என்று கேட்டார். காளமேகம் அதனைக் கேட்டுத் தமக்குள் சிரித்துக் கொண்டார். கண்ணபிரானின் பால லீலைகளை நினைத்தார். வெண்ணைய் திருடியுண்ட மாயன், இடைச்சியின் கைமத்தினால் அடியுண்ட அந்தச் சம்பவம் அவர் கண்முன் நிழலாடியது. வாரணங்கள் எட்டும் மகமேரு வுங்கடலும் தாரணியும் எல்லாம் சலித்தனவால்-நாரணனைப் பண்பாய் இடைச்சி பருமத்தி னாலடித்த புண்வாயில் ஈமொய்த்த போது: (29) நாரணனை ஆயர் பாடியிலே கண்ணனாக அவதரித் திருந்த நாராயணனை, பண்வாய் இடைச்சி பருமத்தினால் அடித்த புண்வாயில் ஈமொய்த்தபோது - பண்போலும் இனிதான பேச்சின ளான இடைச்சியானவள் பெரிய மத்தினால் அடித்ததனாலே ஏற்பட்ட புண்ணிடத்தே ஈ மொய்க்கத் தொடங்கிய பொழுதிலே, வாரணங்கள் எட்டும் அஷ்டதிக்கு யானைகளும், மகமேருவும் மகாமேரு மலையும், கடலும் ஏழ்கடலும், தாரணியும் ஏழு உலகங்களும் (ஆகிய அனைத்துமே), சலித்தன - அசைவு கொண்டன. w "மகாமேரு அசைவு கொண்டது” என்பதால் ஈயேற மலைகுலுங்கப்பாடிய நயம் காண்க. எல்லாம் பெருமானின் திரு உதரத்தே வைத்து காக்கப்படுவன என்பார்கள் பெரியோர்கள். அதனால் அவன் உடல் குலுங்க அனைத்தும் தாமும் அசைந்தன என்றனர். ஆல் - அசை