பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் பொன்னாவரை இலை காய் பூ 'பொன்னாவரை இலை காய் பூ என்னும் சொற்கள் வருமாறு வெண்பா ஒன்று சொல்லுக' என்று கேட்டார் ஒருவர். 'பொன் ஆ வரை இலை காய் பூ என்று அவற்றைக் கொண்டு திருமாலினோடு அவற்றைப் பொருத்திப் பாடினார் காளமேகம். உடுத்ததுவும் மேய்த்ததுவும் உம்பர்கோன் தன்னால் எடுத்ததுவும் பள்ளிக் கியையப் - படுத்ததுவும் அந்நாள் எறிந்ததுவும் அன்பின் இரந்ததுவும் பொன்னா வரையிலை காய் பூ. (30) திருமாலானவர், உடுத்ததுவும் - தாம் ஆடையாக உடுத்திக் கொண்டதும், உம்பர்கோன் தன்னால் எடுத்ததுவும் - தேவர் கோமனாகிய இந்திரனின் மழை பெய்வித்த செயலினாலே எடுத்துத் தாங்கிக் கொண்டதும், பள்ளிக்கு இயையப் படுத்ததுவும் - மகா பிரளயகாலத்திலேதான் கண் வளருவதற்கு ஏற்றதாகக் கொண்டு படுத்திருந்தும், அந்நாள் எறிந்ததுவும் . அந்த நாளிலே கன்றைக் குனிலாகக் கொண்டு எறிந்ததுவும், அன்பின் இரந்துதவும் தான் விரும்பிச் சென்று மாவலியினிடத்தே யாசித்ததுவும் பொன் ஆவரை இலை காய் பூ - பொன்னும், பசுக்களும் கோவர்த்தன மலையும், ஆலிலையும், விளங்காயும், நிலமும் ஆம் பூ நிலவுலகம், குணில் குறுந்தடி, இலை - ஆலிலை. கடல் நடுவிலே செந்தூள் "கடல் நடுவிலே செந்தூள்' எழுந்ததாகக் கற்பித்துப் பாடுவதற்கு இயலுமோ?” என்றார் புலவர். காளமேகத்தின் நினைவில் சிவபெருமான் மன்மதனை எரித்த திருவிளையாடல் எழுந்தது. மன்மதன் திருமாலின் மகன். அதனால் அவனுடைய தாய் திருமகள் ஆகின்றாள். அவளுக்குப் புத்திர சோகம் இருக்கும் அல்லவா! அவள் மார்பில் அறைந்து கொண்டு கதறினாளாம். அப்போது அவள் மார்பிலே பூசியிருந்த சிந்துரக்கலவையின் செந்தூள் மேலே எழுந்து பரந்ததாம். அவளோ பாற்கடல் நடுவே அனந்த சயனத்திலே தன் நாயகனுடன் இருப்பவள். அதனால், கடல் நடுவே செந்தூள் எழுந்ததாகின்றது. இப்படிக் கற்பித்து நயமுடன் பாடுகிறார் காளமேகம். சுத்தபாற் கடலின் நடுவினில் துளி தோன்றிய அதிசயம் அதுகேள் மத்தகக் கரியை யுரித்ததன் மீது மதன்பொரு தழிந்திடும் மாற்றம்