பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 23 வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள் விழுந்துநொந் தயாந்தழு தோங்கிக் கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள் எழுந்தது கலவையின் செந்தூள். (31) சுத்த பாற்கடலின் நடுவினில் - பரிசுத்தமான பாற்கடலின் நடுவிடத்தே, துளி தோன்றிய அதிசயம் அது கேள் - துகள் தோன்றியதான அந்த அதிசய நிகழ்ச்சியைக் கேட்பாயாக: மத்தகக் கரியை யுரித்தவன் மீது மதன் பொருது அழிந்திடும் மாற்றம் - மத்தகத்தையுடைய யானையை உரித்துப் போர்த்த சிவபெருமான் மீதாக மதனன் போரிட்டு சென்று அழிந்ததான செய்தியை, வித்தகக் கமலை செவியுறக் கேட்டாள் - அறிவினை யுடைய தாமரை மலராளான திருமகள் தன் காது பொருந்தக் கேட்டாள்; கேட்டதும், விழுந்து நொந்து அயர்ந்து ஓங்கிக் கைத்தல மலரால் மார்புறப் புடைத்தாள் - மயங்கி விழுந்தாள்; மனம் நொந்து தளர்வுற்றாள்; அழுதாள் ஓங்கித் தன் கைத்தல மாகிய மலரினாலே தன் மார்புறப் புடைத்துக் கொள்ளலையும் செய்தாள்; அப்போது எழுந்தது கலவையின் செந்தூள் - அவள் மார்பிற் பூசியிருந்த சிந்துரக் கலவைச் சாந்தின் செந்துளானது அப்போது சிதறி மேலே எழுவதாயிற்று. 'வித்தகக் கமலை என்றது அவள் பேரறிவு உடையவளா யிருந்தும், புத்திர சோகத்தின் காரணமாகப் பாசப் பற்றினாலே அறியாமை வயப்பட்டு, அப்படி மார்பிலே அறைந்துகொண்டு புலம்பினாள் என்பதற்காம். மும்மதங்கொண்ட யானையைக் கொன்று உரித்த சிவனை ஒரு மதன் சென்று பொருதினான் என்று கூறும் நயத்தை உணர்க, அதனால் அழிவை எதிர்நோக்கியே அவன் சென்றான் என்பதும் புலப்பட வைத்தனர். மததால் அடிததது ‘யசோதைப் பிராட்டி கண்ணனை மத்தினாலே அடித்தாள் அல்லவா! அதற்கு இரங்குவது போன்று பொருள் அமைய ஒரு வெண்பாப் பாடுக என்று சொன்னார் ஒருவர். கண்ணனின் பெருமைகளை எல்லாம் எடுத்துக் கூறி அப்படிப்பட்ட கண்ணன் அழுமாறு யசோதைப் பிராட்டி அடித்தனளே, அது எவ்வளவு அறியாமை உடைய செயல் என்னும் பொருளமைய, உடனே வெண்பாவைச் சொன்னார் காளமேகம். கேட்டவர் வாயடைத்துப் போய் விட்டனர். வண்ணங் கரியனென்றும் வாய்வேத நாறியென்றும் கண்ணன் இவனென்றும் கருதாமல்-மண்ணை அடிப்பது மத்தாலே அளந்தானை யாய்ச்சி அடிப்பது மத்தாலே யழ. (32)