பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் மண்ணை அடி பதுமத்தாலே அளந்தானை வாமனனாகி வந்து உலகனைத்தையும் தன் திருவடித் தாமரையினாலே அளந்தவனாகிய பெருமானை, வண்ணன் கரியனென்றும் நிறத்தினாற் கரியவனாகிய திருமாலே என்றும், வாய் வேத நாறி என்றும் - திரு வாயிடத்தே வேதமணம் கமழும் சிறப்புடையவனே என்றும், கண்ணன் இவன் என்றும் பெருமையுடைய திருமால் இவனே என்றும், கருதாமல் - கருதிப் பார்த்து அவனைப் போற்றி தான் உய்வதற்கான வழிவகையினை நாடாமல், ஆய்ச்சி இடைச்சியான யசோதைப் பிராட்டியானவள், அடிப்பது மத்தாலே அழ அவன் அழுமாறு மத்தினாலேயோ அடிப்பது? இஃது இரங்குதற்கு உரிய செயல் அல்லவோ என்பது கருத்து. மூன்றாவது அடியின், 'அடிப்பதுமத்தாலே’ என்பதனை அடிப் பதுமத்தாலே' எனப் பகுத்துத் திருவடித் தாமரையினாலே எனப் பொருள் உரைத்துக் கொள்ளுதல் வேண்டும். வண்ணம் - நிறம். நாறி - மணப்பவன். கண்ணன் - அனைவருக்கும் கண்ணாக அமைந்த பிரான். என்னை இடுக்கடி! ‘என்னை இடுக்கடி, பாயைச் சுருட்டி, ஏகடி அம்பலத்தே' என்றமைத்து ஒரு செய்யுள் சொல்லுக என்றனர் ஒருவர். அவருக்குச் சொன்னது இது. தடக்கடலிற் பள்ளிகொள்வோம் இதனைநற் சங்கரனார் அடற்புலிக் குட்டிக்கு அளித்தனராம் - அதுகேட்டு நெஞ்சில் நடுக்கம் வந்துற்றது கைகாலெழா நளினத்தி என்னை இடுக்கடி பாயைச் சுருட்டடி ஏகடி அம்பலத்தே. (33) நளிளத்தி - தாமரைமலரினள் ஆகிய என் நாயகியே! தடக் கடலில் பள்ளி கொள்வோம் - பரந்த பாற்கடலாகிய இதனிடத்தே பள்ளிக்கொண்டிருப்போம் நாம்; இதனைச் சங்கரனார் அடற் புலிக்குட்டிக்கு அளித்தனராம் - இந்தப் பாற்கடலைச் சங்கரனார் வலியுள்ள புலிக்குட்டியான உபமந்யு முனிவருக்கு அளித்து விட்டனராம். அதுகேட்டு நெஞ்சில் நடுக்கம் வந்துற்றது, கை கால் எழா - அதனைக் கேட்டதும் என் நெஞ்சிலே நடுக்கம் வந்தடைந்தது, கைகால்களும் எழாவாயின. (ஆதலால்) "என்னை இடுக்கடி பாயைச் சுருட்டி என்னை நின் கக்கத்தில் இடுக்கிக் கொள்ளடி நம் பைந்நாகப் பாம்பையும் சுருட்டிக் கொள்ளடி: ஏகடி அம்பலத்தே - அம்பலத்திற் செல்லடி (சென்று நின் அண்ணனிடத்தே நம்நிலையை எடுத்துக்கூறி அதனை நீக்கும் வகையினை வேண்டுக எனவும், நின் தாய் வீட்டிற்கே இனிப் போகலாம் எனவும் சொன்னதாகக் கொள்க)