பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 25 கொம்பு "பன்றிக்கு மார்பிலே கொம்பு’ என்று ஒரு செய்யுள் கூறுக’ என்றார் ஒருவர். பூர் முஷ்ணம் என்ற திருநகரில் கோயில் கொண்டிருக்கும் பெருமாளுக்குப் பூவராக சுவாமி என்று பெயர். அவர் மார்பிடத்தே பூங்கொம்பு போல்வளாகிய திருமகளைக் கொண்டிருப்பவர். இந்தக் கற்பிதத்தை வெண்பாவாகச் சொல்லி அவரைத் தலைகுனியச் செய்தார் கவிஞர். தெருமுட்டப் பாளை சிதற வளர்பூகத் தருமுட்டச் செவ்வாளை தாவும்-திருமுட்டத் தூரிலே கண்டேன் ஒரு புதுமை பன்றிக்கு மாரிலே கொம்பான வாறு. (34) தெருமுட்டப்பாளை சிதற தெருக்கள் நிறையும்படி பாளைகள் சிதறிவிழுமாறு, வனர்பூகத்தரு முட்டச் செவ்வாளை தாவும் வளர்ந்துள்ள கமுகமரங்கள் மீதெல்லாம் செவ்வாளை மீன்கள் பாய்ந்து விழுகின்ற நீர்வளத்தினைக் கொண்ட, திருமுட்டத்து ஊரிலே ஒரு புதுமை கண்டேன் - பூர் முஷ்ணம் என்னும் ஊரிலே ஒர் அதிசயத்தினை நான் பார்த்தேன்; (அது) பன்றிக்குமார்பிலே கொம்பு ஆன ஆறு அது, பன்றிக்குமார்பிலே கொம்பு உண்டாகி இருக்கின்ற நன்மையே யாம். பன்றி - பூவராக மூர்த்தி. அவர் மார்பில் கொம்பு உண்டாகி யிருந்த தன்மை - அவர் மார்பிடத்தே திருமகள் வீற்றிருக்கும் தன்மை; திருமகளைப் பூங்கொம்பு’ என்றனர். பொன்னாவரை இலை காய் பூ! 'இந்தப்படி முன் ஒருவர் கேட்க, அதற்கு உடுத்தவும் எனத் தொடங்குமோர் வெண்பாவைக் கவிராயரும் சொன்னார். மீண்டும் அதே தொடரைக் கொடுத்து வேறு ஒரு வெண்பாவில் அமைத்துப் பாடுக” என்றார் சாமிநாதர் என்னும் ஒருவர். அப்படியே கவிஞர் பாடியது இது. தோய்ந்தான் மேய்த் தான்குடையாய்த் தூக்கினான் மேன்மேலாச் சாய்ந்தா னெறிந்தான்பின் சாப்பிட்டான்-ஆய்ந்துசொலும் மன்னா வரத்தில் வரு மால்சாமி நாதாகேள் பொன்னா வரையிலைகாய் பூ. (35) ஆய்ந்து சொலும் மன்னா - எதனையும் ஆராய்ந்த பின்னரே அதனைப் பற்றிப் பேசும் இயல்புடைய மன்னவனே! அதனைப்