பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் o 27 எழுத்தா னிதுபெண் ணிதனைமுனி காதில் வழுத்தா ரணக்குகளை வாதுக் - கழைத்ததுவும் மாரன் கை வின்மான்முன் காத்ததுவும் நன்றாகும் தீரமுள்ள சூரிக்கத் தி. (37) எழுத்து ஆண் இது பெண் இது எழுத்துக்குள்ளே ஆண் எழுத்து இதுவென்றும் பெண் எழுத்து இதுவென்றும், அனை முனி காதில் வழுத்து ஆரணக் குகனை - தமிழுக்கு அன்னை போன்றோனான அகத்திய முனிவனின் காதிலே உபதேசத்தருளிய வேதநாயகனான முருகப் பெருமானை, வாதுக்கு அழைத்ததுவும் போரிடற்கு அழைத்ததுவும், மாரன் கைவில் - மன்மதனின் கரத்திலே வில்லாக விளங்குவதும், மால் முன் காத்ததுவும் - திருமால் முன்னாளிலே தோன்றிக் காத்தருளியதும், நன்றாகும் தீரமுள்ள சூர் இக்கு அத்தி ஆற்றலுள்ள சூரபதுமன், கரும்பு, கஜேந்திர ஆழ்வான் ஆகிய யானை என் நன்முறையிலே பொருந்துவனவாம். சூரிக்கத்தி - சூர். இக்கு, அத்தி எனப் பிரிக்கப்ட்டுச் சூரன், கரும்பு, யானை எனப் பொருள் பயத்தலாயிற்று. பச்சைவடம் பாகு சேலை சோமன் 'பச்ச்ைவடம், பாகு, சேலை, சோமன் என்னும் சொற்கள் அமைய ஒரு வெண்பாவைச் சொல்லுக' என்றனர் மற்றொரு புலவர். ./ மாயன் துயின்றதுவும் மாமலராள் சொல்லதுவும் ஏய குருந்திற் கொண் டேறியதும்-துயை இடப்பாகன் சென்னியின் மேல் ஏறியதும் பச்சை வடப்பாகு சேலைசோ மன். (38) என்று காளமேகம் பாடினார். அதன் பொருள்: மாயன் துயின்றதுவும் - மாயையால் பற்றப்படாதவனாகிய திருமால் மகா பிரளய காலத்திலே கண் வளர்ந்ததுவும், மாமல ராள் சொல்லதுவும் - சிறந்த தாமரை மலரிலே இருப்பவளான திருமகளின் சொல்லாகிய அதுவும் கொண்டு, ஏய குருந்தில் ஏறியதும் - கண்ணன் கோபியரிடத்தில் கவர்ந்து கொண்டு குருந்த மரத்தின்மேல் ஏறிக்கொண்ட அதுவும், தூயை இடப்பாகன் சென்னியின்மேல் ஏறியதும் - பரிசுத்த சக்தியாகிய உமையை இடப்பாகத்தே கொண்டிருப்பவனான சிவபெருமானின் திருமுடியின் மேலாக ஏறிக் கொண்டிருப்பதுவும், பச்சை வடம் பாகு சேலை சோமன் முறையே பச்சை நிறமுள்ள ஆலிலையும், வெல்லப்பாகும், சேலையும், சந்திரனும் ஆகும்.