பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கரியும் உமியும் ‘கரி என்று எடுத்து உமி என்று முடிக்கவும், என்று முன்னரே ஒருவர் வினவக் கவிஞரும், கரியதனை' எனத் தொடங்கும் வெண்பாவைச் சொன்னார். இப்போது அந்த அவையிலிருந்த பெண்பாற் புலவர் ஒருவர் அதனையே மீண்டும் சமிக்ஞையாகக் கொடுக்கவே, கவிஞர், அவரை ஏளனஞ் செய்பவராக இப்படிப் பாடுகின்றார். கரிக்காய் பொரித்தாள் கன்னிக்கா யைத்தீய்த்தாள் பரிக்காயைப் பச்சடியாப் பண்ணாள்-உருக்கமுள்ள அப்பைக்காய் நெய்துவட்ட லாக்கினாள் அத்தைமகள் உப்புக்காண் சிச்சி யுமி. (46) அத்தை மகள் என் அத்தை பெற்ற மகளானவள், கரிக்காய் பொரித்தாள் - அத்திக் காயைப் பொரித்து வைத்தாள், கன்னிக் காயைத் தீய்த்தாள் - வாழைக்காயை வதக்கி வைத்தாள்; பரிக் காயைப் பச்சடியாப் பண்ணாள் - மாங்காயைப் பச்சடியாகச் செய்து வைத்தாள் உருக்கமுள்ள அப்பைக்காயை நெய் துவட்டல் ஆக்கினாள் - அனைவருக்கும் விருப்பமுள்ள கத்தரிக்காயை நெய் துவட்டலாகச் செய்து வைத்தாள்; (ஆனால் எல்லாவற்றிலும்) உப்புக்காண் சீசீ யுமி - உப்பு அதிகம்; அதனால் அவை எல்லாம் சீசீ என்று துப்பி விடுவதற்குத் தக்கனவே (அன்றித்தின்பதற்கு ஆகா) அத்தை மகள் ஆசையுடன் செய்தவை என்று உண்டால் எல்லாவற்றிலும் உப்பு அதிகம்! சீச்சீ' என்று சொல்லித் துப்பத்தான் வேண்டும். இப்படிப் பொருள் அமைகின்றது. இதனைக் கேட்டதும். அந்த அம்மையார் வெட்கித் தலை குனிந்தார். மன்-மலுக்கு 'மன்னென்று எடுத்து மலுக்கென்று முடியும்படியான வெண்பாவொன்று அமைக்க' என்றார் ஒருவர்; அவர் சமிக்ஞையை ஏற்றுக் கவிஞர் பாடியது இது. - மன்னுதிரு வண்ணா மலைச்சம்பந் தாண்டாற்குப் பன்னுந் தலைச்சவரம் பண்ணுவதேன்-மின்னின் இளைத்தவிடை மாத ரிவன் குடுமி பற்றி வளைத்திழுத்துக் குட்டா மலுக்கு. (47) இந்தக் கேள்வியைக் கேட்டவர் திருவண்ணாமலையைச் சேர்ந்தவர்; சம்பந்தாண்டான் என்ற பெயரினர். தலையை மழுங்கச் சவரம் செய்து கொண்டிருந்தவர். அதனை ஏளனம் செய்து பாடுகிறார் கவிஞர்.