பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Heólubiš Gastseit 33 மன்னு திருவண்ணாமலைச் சம்பந்தாண்டாற்குப் பன்னும் தலைச்சவரம் பண்ணுவதேன் - நிலைபெற்ற திருவண்ணா மலையினரான இந்தச் சம்பந்தாண்டான் என்பவருக்குச் சிறப்பாகத் தலைச்சவரம் பண்ணுவது எதற்காகத் தெரியுமா? மின்னின் இளைத்த இடை மாதர் - மின்னலினும் ஒடுங்கிய இடையுடைய ரான பெண்கள், இவன் குடுமிபற்றி வளைத்து இழுத்துக் குட்டாமலுக்கு இவனுடைய குடுமியைப் பற்றி இவன் தலையை வளைத்து இழுத்துக் குட்டாமல் இருப்பதற்காகவே என்று அறிவீராக. கேள்விகேட்ட சம்பந்தாண்டான் அதன்பின் தலை நிமிரவே இல்லை. பெண்களிடம் அடிவாங்கும் பித்தன் என்று கவிஞர் பாடியது அவர் மனத்தில் உறுத்திக் கொண்டே இருந்தது. 4. சிலேடையாகப் பாடியவை (மேற்போக்கான சொல் அமைப்பிலே ஒன்றாகவும், ஆனால் அமைதியினாலே இரண்டு மூன்றாகப் பொருள் விளங்கு வதாகவுமுள்ள சுவையான செய்யுட்கள் இந்தப் பகுதியில் தரப்படுகின்றன. செய்யுளில் வரும் சொற்களை நன்றாக ஆராய்ந்து பொருள் நயத்தை உணர்ந்து இன்புறுதல் வேண்டும். இவற்றையும் தண்டிகைப் புலவர் கொடுத்த சமிக்ஞைப்படியே காளமேகம் பாடினார் என்பது வரலாறு) ஆமணக்கும் யானைக்கும் முத்திருக்கும் கொம்பசைக்கும் மூரித்தண்டேந்திவரும் கொத்திருக்கும் நேரே குலைசாய்க்கும்--எத்திசைக்கும் தேமணக்குஞ் சோலைத் திருமலை ராயன்வரையில் ஆமணக்கு மால்யானை யாம். (48) எத்திசைக்கும் தேமணக்கும் சோலைத் திருமலைராயன் வரையில் - எல்லாத் திசைகளிலும் இனிய மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் திருமலைராயனுடைய மலைச்சாரலில், ஆமணக்கு மால் யானை யாம் - ஆமணக்கும் பெரிய மதயானை ஆகும். (அது எவ்வாறெனில்) ஆமணக்கு முத்திருக்கும் கொம்பு அசைக்கும் வித்துகள் விளங்கும், கிளைகளை அசைத்துக் கொண்டிருக்கும்; மூரித்தண்டு ஏந்தி வரும் - பெரிய தண்டுகள் மேலேந்தியபடி வளர்ந்திருக்கும்; நேரே குலைசாய்க்கும் வரிசையாகக் காய்க் குலைகளைத் தொங்கவிட்டவாறு விளங்கும். மால் யானை: முத்திருக்கும் கொம்பசைக்கும் - முத்துக்கள் அமைந்திருக்கக்கூடிய தந்தங்களானதன் கொம்புகளை அசைத்துக் கொண்டு நிற்கும். மூரித்தண்டு ஏந்தி வரும் அந்தக் கொம்புகளில்