பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 41 அரசனானவன்: யாவருக்கும் ரஞ்சனை செய்து - எல்லா மக்களுக்கும் இன்பத்தை விளைவித்தும், யாவருக்கும் அவ்வவர் பாவனையாய் - அனைவருக்கும் அவ்வவரது இயல்பிற்குத் தகுந்தபடியாக விளங்கியும், தீதகலப்பார்த்தலால் - நாட்டிலே தீமைகள் அகன்று போகுமாறு கவனித்தும், மேவும் எதிரியைத் தன்னுளாக்கி - தன்னை அணுகும் எதிரியை வென்று தனக்கு உட்பட்டவனாக்கியும், ஏற்ற ரசத்தால் சதிர் உறலால் - மேற் கொண்ட நவரசப் பொருள்களாலும் சிறப்படையலாலும், ஆடி அரசாம் - கண்ணாடியும் அரசனும் ஒப்பாகக் கூறுதற்கு உரியவராம். கூத்தியர்க்கும் குரங்குக்கும் ஒட்டங் கடியதா லுள்ளவரை மேவுதலால் சேட்டை யெவரிடத்துஞ் செய்தலால் நாட்டமுடன் காத்திரத்திற் குட்டியுறக் கட்டுதலாற் றெட்டுதலால் கூத்தியர்க்கு நேராம் குரங்கு. (61) கூத்தியர்க்கு: கூத்தியராகி பெண்களுக்கு, ஒட்டம் கடியதால் - உதட்டிற் கடிபடுவதனாலும், உள்ளவரை மேவுதலால் - பொருள் உள்ளவரைத் தழுவுதலினாலும், சேட்டை எவரிடத்தும் செய்த லால் - எல்லோரிடத்தும் குறும்புசெய்து விளையாடலாலும், நாட்டமுடன்காத்திரத்தில் குட்டி உறக்கட்டுதலால் விருப்பட் முடனே தழுவுவோர் உடலிலே தன்னுடல் பொருந்துமாறு கட்டிக் கொள்ளலாலும், தெட்டுதலால் - அப்போதே அவரைக் கவிழ்க்க வஞ்சனைகளைச்செய்வதனாலும் (பொருளைத் தட்டிப் பறிப்பதும் ஆம்); குரங்கு: குரங்கானது, ஒட்டம் கடியதால் விரைய ஒடிக் கொண்டே இருக்கும் இயல்புடையது ஆதலாலும், உள்ளவரை மேவுதலால் - தானிருக்கும் மலைமீது ஏறிச் சென்றிருப்பதனாலும், நாட்டமுடன் குட்டி காத்திரத்தில் உறக் கட்டுதலால் விருப்ப முடன் குட்டியை உடலிற் பொருந்தக் கட்டிச் செல்லுதலாலும், தெட்டுதலால் பொருள்களைத் தட்டிப் பறித்துச் செல்லுத லாலும், நேராம் ஒப்பானதாகும். குதிரைக்கும் காவிரிக்கும் ஒடுஞ் சுழிசுத்த முண்டாகும் துன்னலரைச் வாடும் பரிவாய்த் தலைசாய்க்கும் - நாடறியத் தேடு புகழான் திருமலைரா யன்வரையில் ஆடுபரி காவிரியா மே. (62) நாடு அறியத் தேடு புகழான் நாடெங்கும் அறியும்படியாகத் தேடின புகழை உடையவனாகிய, திருமலைராயன் வரையில் திருமலைராயனின் வரையிடத்திலே,