பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் ஆடு பரி. ஆட்டக் குதிரையானது, ஒடும் ஒடிச் செல்லும், சுழி சுத்தம் உண்டாகும் சுத்தமான சுழிகளை உடையதாயிருக்கும், துன்னலரைச் சாடும் - பகைவரை மோதி அழிக்கும், பரிவாய்த் தலைசாய்க்கும் - தன் தலைவனிடத்து அன்புடன் தலைசாய்த்து நிற்கும்; காவிரி: காவிரியாறானது, ஒடும் - ஒட்டத்தை உடையதா யிருக்கும், சுழிச்சுத்தம் உண்டாகும் . அப்படிச் செல்லும் போது நீர்ச்சுழிகளை உடையதாயிருக்கும், தன்னிடத்தே குளிப்பவர்க்குச் சுத்தத்தையும் தரும், துன்னலரைச் சாடும் - நெருங்கிய மலர்களை அலைத்து எறியும், பரிவாய்த்த அலைசாய்க்கும் குதிரை வாயின் துரை போன்ற அலைகளை மடக்கி வீசும்: o அதனால் இரண்டும் தம்முள் நிகரானவையாகும். பரிவாய்த் தலை சாய்க்கும் எனக்கொண்டு கரையைப் பரித்து அந்த இடத்தின் மேல் மண்ணையும் தன்னுட் சாய்க்கும் எனவும் உரைக்கலாம். கீரைப்பாத்திக்கும் குதிரைக்கும் கட்டி யடிக்கையாற் கான்மாறிப் பாய்கையால் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - முட்டப்போய் மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன் ஏறப் பரியாகு மே. (63) வண் கீரைப் பாத்தியுடன் - வளமான கீரைப்பாத்தியுடனே, ஏற அப்பரி ஆகும் ஏறுதற்குரிய அந்தக் குதிரையானது சமமாகும். எங்ங்னமெனில், & கீரைப்பாத்திக்கு கட்டி அடிக்கையால் உழவு கட்டிகளை அடித்துத் தூளாக்குதனாலும், கால்மாறிப் பாய்கையால் - வாய்காலில் மாறிமாறி நீர் பாய்கையினாலும், வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - மண்ணை வெட்டி மறித்துப் பாத்திகளாக்கி வைத்திருக்கின்ற சிறப்பினாலும், முட்டப்போய் மாறித் திரும்புகையால் நீர் கடைமடிையின் இறுதிவரை சென்று மீளவும் மாறிவிடத் திரும்புகையினாலும், குதிரைக்கு: கட்டி அடிக்கையால் - வண்டிகளில் கட்டி அடித்து ஒட்டப்பெறுதலினாலும், கால் மாறிப்பாய்கையால் கால் மாறிமாறிப் பாய்ந்து செல்லுதலினாலும் வெட்டி மறிக்கின்ற மேன்மையால் - எதிரிகளைத் தாக்கிக் கொல்லுகின்ற சிறப்பி னாலும், முட்டப்போய் மாறத் திரும்புதலால் போகவேண்டிய இடம் முழுவதுஞ் சென்று, பின் மீளவும் திரும்பி வருதலினாலும் ஆம.