பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 43 கதவுக்கும் ஆட்டுக்கும் செய்யுட் கிடைமறிக்கும் சேர்பலகை யிட்டுமுட்டும் ஐயமற மேற்றா ளடர்க்குமே-துய்யநிலை தேடும் புகழ்சேர் திருமலைரா யன்வரையில் ஆடும் கதவுநிக ராம். (64) புகழ்சேர் - புகழ் சேர்ந்துள்ள, திருமலைராயன் வரையில் திருமலைராயனின் மலைச்சாரலிடத்தே, ஆடும் கதவு நிகராம் - ஆடும் கதவும் ஒன்றற்கொன்று சமமானதாம்; எங்ங்னமெளில், ஆடு செய்யுள் கிடைமறிக்கும் - வயலில் கிடையா மறிக்கப் படுதலினாலும், சேர் பலகையிட்டு முட்டும் பொருந்திய பலகைகளைக் கொம்பினாற் குத்தி முட்டுதலினாலும், ஐயம் அற மேல்தாள் அடர்க்கும் - சந்தேகம் இன்றி மிகுதியான ஊக்கத் துடன்போரிடுவதனாலும், துய்யநிலை தேடும்; தூய்மையான தங்குமிடத்தைத் தேடி அடைவதனாலும், கதவு: செய் உட்கிடை மறிக்கும் - வீட்டின் உள்ளிடத்தைத் தடுத்து மூடியிருத்தலாலும், சேர் பலகை இட்டு முட்டும் பொருத்தமான பலகைகளைக் கொண்டு மூட்டிச் செய்யப் படுதலினாலும், ஐயம் அற மேல் தாள் அடர்க்கும் - திண்ணமாக மூடப்படுவதற்கு மூடப்படுதலன்றித் தன்னிடத்தே தாளிடப்பட்டு இருத்தலினாலும், துய்யநிலைதேடும் - அழகான நிலையினைக் கூடியிருப்பதனாலும் ஆம் குதிரைக்கும் ஆட்டுக்கும் கொம்பிலையே தீனிதின்னும் கொண்டதன்மேல் வெட்டுதலால் அம்புவியி னன்னடைய தாதலால் - உம்பர்களும் தேடுநற் சோலைத் திருமலைரா யன்வரையில் ஆடுங் குதிரையுநே ராம். (65) உம்பர்களும் தேடும் நற்சோலைத் திருமலைராயன் வரையில் தேவர்களும் தேடிவந்து மகிழும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே, ஆடும் குதிரையும் நேர் ஆம் - ஆடும் குதிரையும் தம்முள் ஒன்றற் கொன்று சமானமாகும். எங்ங்னமெனில், ஆடானது: கொம்பிலேயே தீனி தின்னும் நனிக்கொம்பி லுள்ள இலைகளையே தனக்குத் தீனியாகத் தின்பது கொண்டு அதன்மேல் வெட்டுதலால் - அப்படித் தின்று கொண்டபின்பு அதன்மேல் அத் தீனியினை அசைபோடும் இயல்பும் உடையது; அம்புவியில் அன்னடையது - அழகான இவ்வுலகிலே ஒன்றைப் பின்பற்றி மற்றொன்றும் நடந்து போகின்றதான அத்தகையவொரு நடையினையும் உடையது;