பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 45 உடைத்தாயிருப்பதனாலும், திருவால் அழகாயிருப்பதனாலும், பாரில் பகைதீர்க்கும் பான்மையினால் உலகில் வறட்சியினாலே எழும் பகைமையினை வளம் பெருக்க மழை வருகிறதென அறிவித்துத் தீர்த்துவைக்கின்ற தன்மையினாலும், சாரும் மனுப் பல் வினையை மாற்றுதலால் உலகிற் பொருந்திய மக்களின் பல்வகைத் துயரங்களையும் போக்குவதனாலும், விஷ்ணுவானவர் - நீரில் உளதால் - பிரளய காலத்தே - நீரின் மேற் பள்ளிகொண்டிருந்தலினாலும், நிறம் பச்சையால் - பச்சைத் திருமேனியினை உடைமையினாலும், திருவால் - திருமகளை மார்பிடத்தே கொண்டிருத்தலாலும், பாரில் பகை தீர்க்கும் பான்மையினால் - உலகிடத்தே அறநெறிப் பகைஞரை அழித்துக் காக்கும் தன்மையினாலும், சாரு மனுபல்வினையை மாற்றுதலால் - தன்னைச் சரணடையும் மனிதர்களின் பல்வேறு வினைகளையும் மாற்றி அவர்க்கு நற்கதி அருளுதலினாலும், வெற்றிலையானது: நீரில் உளதால் நீர்க்கால்களிலேயே உண்டாவதனாலும், நிறம் பச்சையால் பச்சை நிறத்தினை உடையதாயிருந்தலாலும், திருவால் - மங்கலப் பொருளாக இருந்ததலாலும், பாரிற் பகை தீர்க்கும் பான்மையால் உலகிற் பகை தீர்க்கும் இடத்து நட்புக்கு அடையாளப் பொருளாக அமைகின்ற தன்மையினாலும், சாரும் மணு பல்வினையை மாற்றுதலால் தன்னைப் பொருந்திய மக்களுடைய பல வியாதிகளைப் போக்குவதனாலும் என்க. பூசுணிக்காயும் பரமசிவனும் அடிநந்தி சேர்தலா லாகம் வெளுத்துத் கொடியுமொரு பக்கத்திற் கொண்டு - வடிவுடைய மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால் பூசுணிக்கா யீசனெனப் போற்று. (68) பூசுணிக்காய் ஈசனெனப் போற்று: பூசணிக்காயையும் ஈசன் என்று கருதிப் போற்றுக, எதனாலெனின், பூகணிக்காயானது: அடி நந்தி சோர்தலால் - அடிப் பாகத்தே பெரிய காம்பு சேர்ந்திருக்க விளங்குவதனாலும், ஆகம் வெளுத்துக் கொடியும் ஒருபக்கத்தே கொண்டு வடிவுடைய மாசுணத்தைப் பூண்டு வளைத்தழும்பு பெற்றதனால் உடல் வெளுத்து, ஒரு பக்கத்தே கொடியினையும் கொண்டதாகி, அழகான வெண்சுண்ணத்தை மேற்புறத்தே கொண்டு, வளைவான தழும்புகளையும் பெற்றிருப்பதனாலும், பரமசிவன்: அடி நந்தி சேர்தலால் - திருவடியிலே நந்திப் பெருமான் சேர்ந்திருத்தலாலும், ஆகம் வெளுத்து - திருநீறணிந்து உடல் வெள்ளை நிறமாகத் தோன்றுதலாலும், கொடியும் ஒரு