பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் தகர வருக்கப் பாட்டு தத்தித்தா தூதுதி தாதுதித் தத்துதி துத்தித் துதைதி துதைதத்தா தாதுதி தித்தித்த தித்தித்த தாதெது தித்தித்த தெத்தாதோ தித்தித்த தாது? (71) "முற்றவும் தகரவருக்க எழுத்துக்களே அமைந்து வருமாறு இயற்றுக’ என்று கேட்ட ஒருவருக்குச் சொல்லியது இச்செய்யுள், வண்டே தத்தி தாது ஊதுதி தாவிச் சென்று பூந்தாதினை ஊதி உண்ணுகின்றாய்; தாது ஊதித் துத்தி - பூந்தாதினை ஊதி உண்ட பின்னர் மீளவும் தாவி எங்கோ செல்லுகின்றாய்; துத்தி துதைதி - துத்தி என ரீங்கார ஒலி எழுப்பியபடியே மற்றொரு பூவினை நெருங்குகின்றாய்; துதைந்து அத்தாது ஊதுதி - அப் பூவினை அணுகி அதனிடத்துப் பூந்தாதினையும் ஊதி உண்ணுகின்றாய். தித்தித்த தாது எது நினக்கு இனிப்பாயிருந்த பூ எதுவோ? தித்தித்தது எத் தாதோ - இனித்திருந்தது எதன் மகரந்தமோ? தித்தித்த தாது - இதழாக அழகியதும் எப் பூவோ? துதைந்து என்ற சொல் துதைத்து என விகாரமாயிற்று. தாது - பூந்தாது, பூவிதழ், பூ என மூன்றையும் குறிப்பதாம். தாதி துதோ தீது இதுவும் தகர வருக்கச் செய்யுள்தான். 'தூது’ என்ற சொல் பன்முறை வருமாறு பாடியுள்ளார். இங்ங்னம் பாடுமாறு ஒருவர் கேட்கக் கவிஞர் பாடியதாகக் கொள்க. தாதிது தோதீது தத்தைத்து தோதாது துதிது தொத்தித்த தூததே - தாதொத்த துத்திதத் தாதே துதித்துத்தே தொத்தீது தித்தித்த தோதித் திதி. (72) (இப்பாடல் கவிஞர் கண்ணதாசனின் "வானம்பாடி'திரைப் படத்தில் இடம் பெற்ற போட்டிப் பாடலாகும்) தாதி துதோ தீது - அடிமைப் பெண்கள் சென்று உரைக்கும் - துதோ பயன்படாதது. தத்தை தூது ஒதாது கிளியோ போய்த் தூது உரைக்க மாட்டாது; துதி தூது ஒத்தித்த தூததே தோழியின் தூதானது நாளைக்கடத்திக்கொண்டே போகும் தூதாயிருக்கும் தேதுதித்த தொத்து தீது - தெய்வத்தை வழிபட்டுத் தொடர்தலும் பயனற்றதாகும்; (அதனால்) தாதொத்த துத்தி தத்தாதே - பூந்தாதினைப் போன்ற தேமல்கள்என்மேற் படர்ந்து மிகாது; தித்தித்தது ஒதித் திதி - எனக்கு இனிமையான தான என் காதலனின் பெயரையே நான் ஒதிக்கொண்டிருப்பேனாக,