பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 51 ஒன்றிரண்டு மூன்றுநான்கு ஐந்தாறு ஏழெட்டு ஒன்பதுபத் துப்பதி னொன்று-பன்னி ரண்டுபதின் மூன்றுபதி னான்குபதி னைந்துபதி னாறுபதி னேழ்பதி னெட்டு. (76) இதன் கண் முறையே ஒன்று முதல் பதினெட்டு வரையும் வந்தமை காண்க. பன்னிரு ராசிகள் 'இராசிகள் பன்னிரண்டின் பெயர்களும் வரவேண்டும். அவற்றின் முறையிற் பிறழ்ச்சி ஏற்படுதலும் கூடாது. அவற்றின் தொகையான பன்னிரண்டும் குறிக்கப் பெற்றிருக்கவேண்டும். எவ்வித அடைமொழியும் இல்லாமல் இப்படி ஒரு வெண்பாச் சொல்லும் என்றார் ஒரு புலவர். பகருங்கால் மேடம் இடபம்மிது னங்கர்க்க டகஞ்சிங் கங்கன்னி துலாம்விர்ச்-சிகந்த நுசுமகரங் கும்பம் மீனம்பன் னிரண்டும் வசையறுமி ராசி வளம். (77) என்று பாடினார் காளமேகம். பகருங்காலத்தே, மேடம், இடபம், மிதுனம், கர்க்கடகம், சிங்கம், கன்னி, துலாம், விருச்சிகம், தநுசு, மகரம், கும்பம், மீனம் என்னும் பன்னிரண்டும் குற்றமற்ற இராசிகளின் வளமையாகும் என்று வெண்பாவும் அமைந்தது. பகர்தல் சொல்லுதல், வசை குற்றம், வளம் வளமை தை மாசி பங்குனி ஒருவர், காளமேகம், சொன்ன சமிசைகளுக்கு ஏற்ற படி எல்லாம் நொடியளவுக்குள் சுவைபடப் பாடி வருதல் கண்டு, அவரைத் தாம் மடக்கிவிட நினைத்தவராகத் தை மாசி பங்குனி என்னும் மாதப் பெயர்கள் வருமாறு ஒரு வெண்பாச் சொல்லும் என்றார். கவிஞரோ அப்படியே சொன்னதுடன், அவை மாதப் பெயர்களாயினும் பொருள் வேறாகச் சுட்டுகின்ற சுவையுடையன வாக அமையுமாறும் தம் வெண்பாவை அமைத்து புாடினார். புலவர் அயர்ந்து அமைந்தார். அந்தப்பாடல் பாணர்க்குச் சொல்லுவதும் பைம்புனலை மூடுவதும் தானு விரித்ததுவும் சக்கரத்தோன்-ஊனதுவும் எம்மானை ஏத்துவதும் ஈசனிடத்துத் துஞ்சிரத்தும் தைமாசி பங்குனிமா தம். (78) பாணர்க்குச் சொல்லுவதும் - தையற்காரர்களுக்குச் செய்யெனச் சொல்லும் சொல்லும், பைம்புனலை மூடுவதும் -