பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 53 ஒருபாகத் திருத்தினான் கையில் ஏற்றான் ஒருமதலை தனக்களித்தான் உண்டான் பூண்டான் பரிவாயொண் கரத்தமைத்தான் உகந்தான் இந்தப் பைம்பொழிற்றில் லையுளாடும் பரமன் தானே. (80) 'நடுவெழுத்து அலங்காரமாக ஒரு செய்யுள் செய்க, என்று ஒருவர் சொல்ல, அப்படியே பாடியது இது. திருமால் வாகனம் - கருடன்; அதற்கு நாகாரி எனவும் பெயர். (1) நாவாய் - கலம் (மரக்கலம்), இராசி ஒன்று-கன்னி, சினை - கவடு, தெவிட்டார் - ஆரார், மாதுலன் - மாமன், கோகிலம் - பல்லி, இவ்வேழின் உருவாம் ஏழுெழுத்தின் நடு எனக்குச் செய்தான். அதாவது காலன் வராமல் செய்தான். உகந்து பதினான்கினையும் தானே கொண்டான் - மேற் குறித்த மூவெழுத்துச்சொற்கள் ஏழனுள் நடு வெழுத்துக்கள் ஏழும் நீங்கிய பதினான்கினையும் சிவனே கொண்டான். அவை நாரி, கம், கனி, கடு, ஆர், மான், பனி என்பவை. அவை கொண்ட முறை: நாரியை (உமையை) ஒரு பாகத்து இருத்தினான்; கம் (கபாலம்) கையில் ஏற்றான்; (கனி) ஒரு மதலைக்கு அளித்தான் (பிள்ளையாருக்கு), கடு (நஞ்சு) உண்டான், ஆர் (ஆத்தி மாலை) பூண்டான், மான் பரிவாய் ஒண்கரத்து அமைத்தான். பலி உகந்தான்; யார் இங்ங்னம் கொண்டவன்? இந்தப் பைம்பொழில் தில்லையுள் ஆடும் பரமனே தான் அவன்! இவ்வாறு அமைத்து நயமுடன்பாடினார் கவிஞர். நிரனிறைப் பொருள்கோள் (சிவன்) ஒரு வரிசை முறையாகச் சிலவற்றை ஒரு பாடலின் முற்பகுதியில் அமைத்து அவற்றைப் பின்னர் அதே வரிசை முறைப்படி பொருள்பட முடித்தல் வேண்டும். இந்த முறையில் முதலடியில் வருவன, பிறகு மூன்று அடிகளிலும் வருவன கொண்டு முறையே முடிவு பெறும். கூற்றுவனை வின்மதனை யரக்கர் கோவைக் கூனிலவைக் குஞ்சரத்தை யிஞ்சி மூன்றை ஏற்றுலகின் புறவுருவு மாளத் தோள்க ளிறவெறிப்ப விமையப்பெண் வெருவ வேவக் காற்றொழிலா னயனத்தால் விரலால் கற்றைக் கதிர்முடியாற் கரதலத்தாற் கணையாற் பின்னும் ஊற்றறிய வுதைத் தெரித்து நெரித்துச் சூடி உரித்தெரித் தானவனென்னை யுடைய கோவே. (81)