பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் ஆதி சிவன் அனைத்துக்கும் ஆதியான சிவபிரான், ஆயன் - கோபாலனான திருமால், நேயமுடன்-விருப்பமுடன் கொண்டது, ஆழி - சக்கரம், ஆலம் நஞ்சு, மங்கை இடத்தாற்கு - மங்கையைத் தன் இடப்பாகத்தே உடையவனுக்கு சிவனுக்கு. இதன்கண் திருமால் சிவன் ஆகியோரின் கண்கள், ஆயுதம், அவர் உண்பவை ஆகியன முறையே வந்தன. கொன்றை-சிவன் இந்தச் செய்யுளில் ஒரு சிறு மாற்றம், கடைசி அடியான 'சிக்கலிலே வாழும் சிவன்' என்ற தொடரை முதலில் வைத்துப் பொருள் உரைத்தல் வேண்டும். சிக்கல் - இது திருச்சிக்கல் என்று வழங்கப் பெறும் பாடல் பெற்ற தலம். நாகைப்பட்டினத்திலே இருந்து மூன்றுமைல் தொலைவில் உள்ளது. "சிக்கல்' என்னும் ரயிலடி ஊருக்கு அரை மைலில் இருக்கிறது. சுவாமி பெயர்: நவ நீதேசுவரர். தேவி பெயர்: வேனெடுங்கண்ணி அம்மையார். சிங்காரவேலன் சூரனைச் சங்காரம் செய்த இடம் இது என்பார்கள். சிக்கல் வடிவேலனுக்குக் கந்தசஷ்டிப் பெரு விழா இன்றும் சிறப்பாக நடைபெறவதாகும். இப்பாடல் நவநீதேசுவரரைக் குறித்தது; மாயனையும் குறிப்பது. கொன்றை மலர்தரித்தான் கோபாலன் கோலெடுத்து நின்றுகுழ லூதினான் நீள்சடையோன்-பொன்றிகழும் அக்கணிந்தான் மாயன் அரவணையிற் கண்வளர்ந்தான் சிக்கலிலே வாழும் சிவன். (85) சிக்கலிலே வாழும் சிவன்கொன்றை மலர் தரித்தான் - திருச்சிக்கலிலே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமான் கொன்றைமலர் மாலையினைத் தரித்தவன்; கோபாலன் கோல் எடுத்து நின்று குழல் ஊதினான் - கோபாலனான மாயவனோ மாடுமேய்க்கக் கோலையும் கையில் எடுத்துக் கொண்டு நின்று புல்லாங்குழலை வாசித்தான்; பொன் திகழும் நீள் சடையோன் அக்கு அணிந்தான் - அழகுடன் விளங்கும் நீண்ட சடாபாரத்தை உடைய சிவபிரான் எலும்பினை ஆபரணமாக அணிந்தான்; மாயன் அரவணையிற் கண் வளர்ந்தான் - திருமால் பாம்பாகிய படுக்கையிலே படுத்து உறங்கினான். கடம்பற்குக் கை கடம்பர்க்கெண் டோளயற்குக் கண்பதினைந் தாமால் கடம்பற்கே நால்வாய்கை யைந்தே-கடம்பற்கோ டானைமுகற் காயிரங்கண் ணாகண்ட லற்கிலம்பூா டானைமுகற் காறிரண்டு கை. (86)