பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - 59 போற்றுதலை உட்கொண்டவையாகவும் அமைந்து, இலக்கியச் செழுஞ்சுவையுடன விளங்குவதனைக் காணலாம். அன்னம் இறங்கான் கம்பமத கடகளிற்றான் தில்லைவாழும் கணபதிதன் பெருவயிற்றைக் கண்டுவாடி உம்பரெலாம் விழித்திருந்தார் அயில்வேற்செங்கை உடையவறு முகவனுங்கண் ணிராறானான் பம்புசுடர்க் கண்ணனுமோ நஞ்சுண்டான்மால் பயமடைந்தான் உமையுமுடல் பாதி யானாள் அம்புவியைப் படைத்திடுவ தவமேயென் றயனு மன்ன மிறங்காம லலைகின் றானே. (90) சிதம்பரத்திலேயுள்ள கற்பக விநாயகரைப் பற்றிப் பாடிய செய்யுள் இது. நிந்திப்பது போலத் தோற்றினும், போற்றுதலாகவே அமைந்துள்ள சிறப்பினைக் கண்டு இன்புறலாம். அசைவினைக்கொண்ட மதம் பொழியும் யானை முகத்தினை உடையவனாகிய, தில்லை நகரிலே கோயில் கொண்டிருக்கின்ற கணபதியினுடைய பெருவயிற்றினைக் கண்டு வாட்டமுற்றுத் தேவர்கள் எல்லோருமே கண் இமையாது கவலையுடனே இருந்தார்கள். கூர்மையான வேற்படையினைக் கைக்கொண்டோனாகிய ஆறுமுகப்பெருமானும், கண்ணிரை ஆறாகப் பெருக்கி நின்றனன் (கண் ஈராறு. ஆனால் என்பதனை இப்படிக் கூறினர்) நெருப்பான ஆலகால நஞ்சினையே உண்டு விட்டனன். திருமாலும் பயம் அடைந்தான் (பாற்கடல் அடைந்தான்) உமையும் உடல் பாதியாகிப் போயினாள் (சிவனுடலிற் பாதியானதைக் கூறினர்) அழகிய இவ்வுலகினைப் படைப்பதும் வீணே என்று கருதியவனாக, அயனும் அன்னமிறங் காமல் அலைகின்றவன் ஆயினானே! இனி, இவ்வுலகந்தான் யாதாகுமோ? (அன்ன வாகனத்தே உலவுகிறானே) என்பது பொருள். பெரு வயிறு - மகோதரம் என்னும் நோய்; அதனால் அனைவரும் வருந்தித் துயருற்றனர் என்று வருந்துவது போலக் கொள்ளுக. உலகின் துயருக்கு இரங்குவது போலவும் கொள்ளுக. புலி போகுமோ? தில்லை நடராசப் பெருமானைப் போற்ற நினைக்கிறார் காளமேகம் பெருமானின் திருநடனத்தைக் கண்டு அகலாதிருக்கும் புலிக்கால் முனிவர் பெருமானின் நடனம் இரண்டும் அவரை ஒரே சமயத்தில் ஆட்கொள்ளுகின்றன. கவிஞர் பாடுகின்றார்.