பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் நாட்டுக்கு ளாட்டுக்கு நாலுகா லையாநின் ஆட்டுக்கு இரண்டுகா லானானும்-நாட்டமுள்ள சீர்மேவு தில்லைச் சிவனேயில் வாட்டைவிட்டுப் போமோசொல் லாயப் புலி. (91) சீர் மேவும் தில்லைச் சிவனே! - புகழ் விளங்கும் தில்லை நகரத்தே கோயில் கொண்டிருக்கும் சிவபெருமானே, ஐயா . ஐயனே! நாட்டுக்குள்ஆட்டுக்கு நாலு கால் நாட்டிலே ஆடுகட்கு நான்கு கால்களே, நின்ஆட்டுக்கு இரண்டுகால் நின்னுடைய ஆட்டுக்கோ (நடனத்திற்கோ) இரண்டுகால்கள் தாம்; ஆனாலும், நாட்டமுள்ள இவ்வாட்டை விட்டு-விருப்பமுள்ள இந்த ஆட்டை விட்டுவிட்டு? போமோ சொல்லாய் அப்புலி - அந்தப் புலியாகிய வியாக்கிர மாதரும் நீங்கிப் போவாரோ? நீயே சொல்லுவாயாக. வியாக்கிர பாதர் - புலிக்கால் முனிவர்; இவரைப் புலி எனவும். பெருமானின் நடனத்தை ஆடு எனவும் குறிக்கின்றார் கவிஞர். அவர் எப்போதும் நடராசனின் திரு நடனத்தைக் கண்டு தொழுதிருப்பவர் என்பதும் குறித்தனர், புலி ஆட்டை விட்டுவிட்டுப் போகாது என்பது உலகியல் உண்மை. அதனை நயமுற அமைத்துப் பாடிய திறத்தைப் போற்ற வேண்டும். நீ ஏழையானால்? சிவபெருமான் அடியவர்க்கு மிகமிக எளியவன். அந்த ஏழைமையாளனாகிய அவன் உள்ளத்தை வைத்து நிந்தாஸ் துதியாகப் பெருமானைப் பாட நினைக்கிறார் கவிஞர். தில்லைப் பெருமானைப் போற்றிய அத்தகைய சுவையுள்ள பாடல் இது. தாண்டி ஒருத்தி தலையின்மேல் ஏறாளோ பூண்டசெருப் பாலொருவன் போடானோ- மீண்டொருவன் வையானோ வின்முறிய மாட்டானோ தென்புலியூர் ஐயாநீ யேழையா னால். (92) தென்புலியூர் ஐயா - அழகிய புலியூர் ஆகிய சிதம்பரத்திலே வீற்றிருக்கும் பெருமானே! நீ ஏழையானால் நீ எளியவனானால், தாண்டி ஒருத்தி தலையின் மேல் ஏறாளோ ஒருத்தி (கங்கை) குதித்து வந்து நின் தலைமீதும் ஏற்றிக்கொள்ள மாட்டாளோ? பூண்ட செருப்பால் ஒருவன் போடானோ - தன் காலிலே போட் டிருக்கும் செருப்பினாலேயே (கண்ணப்பனாகிய) ஒருவன் நின்னை அடிக்கவும் மாட்டானோ? மீண்டொருவன் வையானோ வில்முறிய மாட்டானோ மற்றுமொருவன் (பார்த்தன்) உம்மை வைய்யமாட்டானோ? வில் முறியும்படி அடிக்கவும் செய்யானோ? (மாட்டுதல் - அடித்து துன்புறுத்தல்)