பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 61 பெருமானை எளியவன் என்று கருதியே இப்படி அவர்கள் துன்புறுத்தினார்கள் என்கிறார். இதனால் அடியார்க்கு எளியவனான நீ கங்கை, கண்ணப்பன், பார்த்தன் ஆகியோரின் அச்செயல்களைப் பொறுத்து அவர்களையும் ஆட்கொண்ட பெருமானாவாய் என வியந்து போற்றினரும் ஆம் எந்த உபாயம்? சிதம்பரம் சபாநாயகரின் ஆட்டத்தை வியந்து காளமேகம் பாடுகிறார். ' கோவிந்தக் கோனார் இருக்கின்றார்; அண்டர் பலர் காத்திருக்கின்றார்கள்: இருந்தும் கையிலே ஒடெடுத்த நீ. தில்லையுள்ளே புகுந்து ஆடும் எடுத்தனையே? அது எந்த உபாயத்தினால் எடுத்தனை அப்பனே?” என்கிறார். ஆடு திருடியவன்' என்று நிந்திப்பது போலத் தோற்றும் நிந்தாஸ்துதி இது. ‘பிச்சைக்காரன் எதற்காக ஆடு திருடும் கள்ளனாக ஆயினாய்? என்று வியக்கின்றார் போலவும் செய்யுள் அமைந்துள்ளது. கொங்குலவும் தென்றில்லைக் கோவிந்தக் கோனிருக்கக் கங்குல்பக லண்டர்பலர் காத்திருக்கச் - செங்கையிலே ஒடெடுத்த அம்பலவ ஓங்குதில்லை உட்புகுந்தே ஆடெடுத்த தெந்த உபாயம். (93) கொங்கு உலவும் தென்தில்லைக் கோவிந்தக்கோன் இருக்க நறுமணம் கமழும் அழகிய தில்லைக்கோவிந்தராகிய கோனார் அங்கே இருக்கவும்; கங்குல் பகல் அண்டர் பலர் காத்திருக்க - இரவும் பகலுமாக இடையர்கள் (தேவர்கள்) பலரும் கூடிக் காவல் காத்திருக்கவும், செங்கையிலே ஒடு எடுத்த அம்பலவா- சிவந்த நின் கையிலே திரு வோட்டை எடுத்துவிட்ட அம்பலவனே! ஓங்கு தில்லையிற் புகுந்து ஆடு எடுத்தது எந்த உபாயம்? - புகழ் ஓங்கிய சிதம்பரக்கோயிலுள்ளே புகுந்து ஆட்டினை எடுத்தது தான் எந்தத் தந்திரத்தினாலோ? நீ ஆட்டத்தினைத் தொடங்கியது எதனாலோ? எதற்காகவோ? ஆடு ஆடும்; ஆட்டமும் ஆம். கொங்கு - மகரந்தம்; அதினின்று எழும் மணத்தைக் குறித்தது. உபாயம் தந்திரம், ஆடு எடுத்தல் - ஆட்டைத் தூக்கிப் போதல், நடனத்தைத் தொடங்கல்: கோவிந்தக் கோனாரும் பிறரும் காவல் காத்து இருக்கவும், பிழைக்க வழியற்றுப் பிச்சைக்கு ஒடேந்திய நீ, எவ்வாறு அவர்களறியாதே புகுந்து ஆட்டை எடுத்தனையோ! இப்படிக் கேட்கிறார் கவிஞர். மான் கன்றின் செயல் தில்லை மூவாயிரவர்கள், தில்லைவாழ் அந்தணர்கள்' என்னுஞ் சிறப்பினை உடையவர்கள். ஒரு சமயம் காளமேகம்