பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 63 திருமாலுக்குக் கால் நீட்டுவதற்கு உரிய இடம் எது, நீட்டக் கூடாத இடம் எது என்று தெரியுமோ? தெரியாததனால் அதனைக் குற்றம் சொல்லுதலும் நமக்கு ஒரு மரபில்லை என்றறிவாயாக திரிபுர தகன காலத்ததே, திருமால் விடையாகிப் பெருமானைச் சுமந்து சென்றனன். அதனைச் சுட்டிப் பேசுகிறார் கவிஞர். மாட்டுக்கு எது மரபு, எது மரபில்லை என்று உணர முடியுமோ? மேலும், அது சுமை சுமந்து அலுத்துக் கிடக்கும் மாடு; அதன் செயலைக் குறித்து நாம் பாராட்டலாமோ? விட்டுத்தள்ளும் என்கிறார். எளியவன் அவன்! அம்பலவாணர் அடியார்களுக்கு எளியவராயிருப்பவர். வேடனாகி வந்தகாலத்திலே அருச்சுனன் வில்லால் அடித்து நின்றான். கண்ணப்பர் ஒரு கண்ணைத் தோண்டி அப்பி விட்டுப் பெருமானின் மற்றொரு கண்ணினும் நீர் வழியக் கண்டு, இடம் அறிதற்குத் தம் செருப்புக் காலினாலே மிதித்துத்கொண்டு தம் மற்றொரு கண்ணையும் அப்பினார். சாக்கியரோ கல்லையே மலராகப் பாவித்து எறிந்தனர். மதுரை மன்னனோ பிட்டுக்கு மண்சுமந்த காலத்தே பெருமானைப் பிரம்பாலே அடித்தான். எனினும், அவர்கட்கும் அருள் செய்த தயாளன் அவன். இதனைக் குறித்தும், அவன் பிறப்பிலியாகிய தன்மையைப் போற்றியும் இச் செய்யுளைப் பாடுகின்றார் காளமேகம். வில்லா லடிக்கச் செருப்பாலுதைக்க வெகுண்டொருவன் கல்லா லெறியப் பிரம்பா லடிக்கவிக் காசினியில் அல்லார் பொழிற்றில் லையம்பல வாணற்கோ ரன்னைபிதா இல்லாத தாழ்வல்ல வோவிங்நு னேயெளி தானதுவே! (96) மரச் செறிவினாலே இருள் நிறைந்திருக்கும் சோலைகளை யுடைய சிதம்பரத்தே, அம்பலத்தில் நடனமிட்டிருக்கும் பெருமானுக்கு, இந்த உலகத்திலே ஓர் அன்னை பிதா இல்லாத தாழ்ச்சியினால் அல்லவோ, ஒருவன் வில்லால் அடிக்கவும், மற்றொருவன் செருப்பால் உதைக்கவும், கோபித்து ஒருவன் பிரம்பினாலே அடிக்கவும், ஒருவன் கல்லால் எறியவும் இவ்வாறான தாழ்ச்சிகள் எல்லாம் எளிதாகிப் போயின. அன்னை பிதா இருந்திருந்தால் இப்படி நடக்கப் பார்த்திருப்பார்களோ?” என்பது கருத்து. இதனால் தாய் தந்தையரின் சிறப்பும் கூறப்பெற்றது. மேலும் பெருமானின் கருணைப் பெருக்கமும் காட்டப் பெற்றது செயலைக் கருதாது, செய்பவரின் பக்திமையைக் கருதி உவப்பவன் சிவன் என்பது இதனால் விளங்கும்.