பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 O காளமேகப் புலவர் தனிப்பாடல்கள் கண்ணன் வேறா! 'திருமாலே பரம்பொருள்; சிவன் பரம்பொருள் அல்லன்' என்று சிலர் கூறினர். இது மதுரையை அடுத்த அழகர் கோயிலிலே ஒருசமயம் நிகழ்ந்தது. இதனைக் கேட்ட காளமேகம் நகை கொண்டார். "அவர் வேறு, இவர் வேறா? இப்படி மெய்ப் பொருள் விளங்கப் பாடினார், கடம்பவனச் சொக்கருக்குக் கண்ணன்றான் வேறோ இடம்பெரிய கண்ணொன்றை ஈந்தான்-உடம்பதனில் செம்பாதி யானான் சுமக்க எருதானான் அம்பானான் தேவியுமா னான். (105) கடம்பவனமாகிய மதுரையிலே கோயில் கொண்டிருக்கிற சொக்கநாதப் பெருமானுக்குக் கண்ணன்தான் அயலானவன் ஒருவனோ? ஒருபோதும் இல்லையே! விசாலமான பெரிய ஒரு கண்ணினையே முன்பு காணிக்கையாகக் கொடுத்த அன்பன் அவனாயிற்றே! அன்றியும் எம் பெருமானின் திருமேனியிற் சரிபாதியாக விளங்கும் அம்மையும் அவனாயிற்றே! அவரைச் சுமக்கக்கருதி அந்நாளில் காளையாக ஆகியவனும் அவனல் லனோ திரிபுரதகன காலத்தே எய்தற்குரிய அம்பாகி உதவியவனும் அத்திருமாலே அல்லனோ மற்று எம்பெருமானின் தேவியும் அவனேயன்றோ? திருமாலைச் சிவனுடைய சக்தியாகவே கொள்வது சைவ மரபு. அதனை, இப்படி விளக்கியுள்ளார் கவிஞர் சிவவிஷ்ணு பேதங்களைக் கடந்த செறிவான பாடல் இது. புதுமை! புதுமை! மதுரையிலே மீனாட்சியம்மையை தரிசித்த காளமேகம் அம்மையை ஆனந்த பரவசமாகத் துதிக்கும் சிலேடைப் பாடல் இது. விள்ளப் புதுமையொன் றுண்டால வாயிளின் மேவு தென்னன் பிள்ளைக் கொருகுலை மூன்றே குரும்பை யிடித்ததிலே கொள்ளிக் கணன்றிட்டி யாலோர் குரும்பை குறைந்த மிர்தம் உள்ளிற் பொதிந்த விரண்டிள நீர்க்கச் சுறைந்தது வே. (106) நேர்பொருள்: சொல்வதற்கு ஒரு புதுமை ஒன்று உண்டு. அது திருவாலவாயிடத்தே இருக்கும் தென்னம் பிள்ளையிடத்தே, ஒரு குலையில் மூன்றே குரும்பைகள் பிடித்தன; அவற்றுள்