பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 71 கொள்ளிக்கண்ணனின் திருஷ்டியாலே ஒன்று குறைந்து போயிற்று, அமுதம் உள்ளே பொதிந்ததாகப் பிற இரண்டும் இள நீராகிக் கைப்பு உடையதாகவும் ஆயிற்று. அம்மையைக் குறித்த பொருள்: திருவாலவாயினிடத்தே சொல்லுவதற்குத் தக்கதான புதுமையொன்று உள்ளது. தென்னவனான மலையத்துவசனுடைய பெண்ணாகிய தடா தகைக்கு ஒரு வரிசையிலே மூன்று தனங்கள் முகிழ்த்தன. அவற்றுள் ஒன்று நெருப்புக் கண்ணனான சோமசுந்தரப்பிரானின் பார்வைபட்டு மறைந்தது. உயிர்களைக் காப்பாற்றும் அமுதம் உள்ளிடத்தே பொதிந்த இரண்டு இளநீர்கள் போன்ற தனங்களும், பின்கச்சுக்குள்ளே அடங்கு வனவுமாயின. தடாதகைப் பிராட்டிக்கு மூன்று தனங்கள் எழுந்தன. என்பதும், சிவபிரானைக் கண்டதும் ஒன்று மறைந்ததென்பதும் திருவிளையாடற் புராணத்திலே கூறப்பட்டிருக்கிறது. அதனையே இப்படிச் சுவையாகப் பாடுகிறார் கவிஞர். பருந்து எடுத்துப் போகிறது! காஞ்சிபுரத்திலே வரதராசப் பெருமாளின் கருடோத்சவம் நடந்து கொண்டிருந்தது. கருட வாகனத்தே பெருமாளும் நகர் வலம் வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருமாளைப் பற்றி நிந்தாஸ்துதியாகப் பாடியது இது. பெருமாளும் நல்ல பெருமாள் அவர்தம் திருநாளும் நல்ல திருநாள்-பெருமாள் இடந்திடத்திற் சும்மா இராமையினா லையோ பருந்தெடுத்துப் போகிறதே பார். (107) "இந்தப்பெருமாளும் ஒரு நல்ல பெருமாள்! அவர் திரு நாளும் ஒரு நல்ல திருநாள்! அந்தப் பெருமாள் இருந்த இடத்திலே சும்மா இராமையினால், ஐயோ! அவரைப் பருந்து எடுத்துக் கொண்டு போகிறதே? அதனைப் பார்! மேற்போக்காகப் படித்தால், பெருமாளையும், அவர் திருநாளையும் புலவர் நிந்திப்பதாகவே தோன்றும். ஆனால் பொருள் பின்வருமாறு கொள்க. & பெருமாளும் நல்ல பெருமாள் - வரதராசப் பெருமாளும் அடியவர்க்கு நலந் தருகின்ற பெருமை உடையவரே; அவர்தம் திருநாளும் நல்ல திருநாள் அவரைக் குறித்துக் கொண்டாடப் பெறும் திருநாளும் நன்மை தருவதான ஒரு திருநாளே, (அன்பர்க்குத் தாமே அவரவர் இருக்கும் இடம் சென்று அருள்புரியும் கருணைப் பெருக்கினாலே); பெருமாள் இருந் திடத்திற் சும்மா இராமையினால் - பெருமாள் தாமிருந்த இடத்தி