பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 73 மாக்கைக் கிரங்கும் குருகும் வளர்சக்ர வாகப்புள்ளும் தாக்கச் சரபங் குழைந்த தெவ்வாறு சகதலத்தை ஆக்கிப் பெருக்கித் திருவறச் o சாலையில் அன்னமிட்டுக் காக்கைக் கொரு.கொக்கின் கீழே இருக்குங் கருங்குயிலே. (109) நின் பெருமை பொருந்திய கைகளிலே யிருந்து ஒலிக்கும் வளைகளும், வருகின்ற சக்கரவாகப் பறவையினைப்போன்றதாக விளங்கும் தனபாரங்களும், அழுத்தமாகப் பொருந்தித் தாக்கிவிடச் சிங்கத்தைத் தாக்கியளிக்கும் சிம்புள் என்னும் வடிவை மேற்கொண்ட சிவபெருமானின் வலிய திருமேனியும் குழைந்து போயினதே! அதுதான் எப்படியோ? உலகத்தைப் படைத்து வளம்பெருக்கி அழகான அறச்சாலையிலே அனைவருக்கும் உணவும் அளித்து, உயிர்களைக் காக்கும் பொருட்டாக, ஒப்பற்ற மாமரத்தின் கீழே அமர்ந்து தவமிருக்கும், கருமை நிறமும், குயிலினும் இனிய குரலும் உடையவளான அம்மையே! அதனை எனக்குச் சொல்வாயாக. - அம்மையின் தழுவக் குழைந்த திருவிளையாடலை நினைத்தும், உலகிற்கு ஆதியாக விளங்கும் அவள் கருணைப் பெருக்கினை வியந்தும், காளமேகம் இப்படிப் பாடுகின்றார். எலி இழுத்துப் போகிறது! காஞ்சிபுரத்திலே, விநாயகப் பெருமானுக்கு உற்சவம் நடந்து கொண்டிருந்தது. பெருமான் பெருச்சாளி வாகனத்தில் அமர்ந்து செல்கிறார். "பாவம் இப்படி இந்தப் பிள்ளையை எலி இழுத்துப் போகிறதே! சிவனுடைய மழு எங்கே? திருமாலின் சக்கரம் எங்கே? பிரமனின் தண்டம் எங்கே? இதனைத் தடுக்காமல்இருப்பதனால் அவர்களிடமிருந்து அவை யாவும் பறிபோய்விட்டனவோ?” என்று அங்கலாய்க்கிறார் கவிஞர். மூப்பான் மழுவும் முராரிதிருச் சக்கரமும் பாப்பான் கதையும் பறிபோச்சோ-மாப்பார் வலமிகுந்த மும்மதத்து வாரணத்தை யையோ எலியிழுத்துப் போகின்ற தென். (110) மா பார் வலிமிகுந்த மும்மதத்து வாரணத்தை - பெரிய பருமையான வலிமிகுந்த மும்மதமும் பொருந்திய யானை முகக் கடவுளை, எலி இழுத்துப் போகின்றது என் பேரெலியாகிய பெருச்சாளி இப்படித் தெருவூடே இழுத்துச் செல்லுகின்றதே, இது என்ன அநியாயம்?