பக்கம்:காளமேகப் புலவர்-தனிப்பாடல்கள்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க்-கேசிகன் 77 ஒள்ளிய தொடியணிந்த பரவையாருக்காக, அவள் சுந்தரரோடு மனம் பொருந்துமாறு, ஒரு தடவையே அல்லாமல், அன்றிரவிலேயே இரு தடவையும் தூது நடந்து சென்றால், நன்றாகப் படமெடுத்து ஆடுகின்ற பாம்பினை அணியும் அழகிய திருவாரூர்ப் பெருமானின் காலோய்ந்து ஆடாமல் என்னதான் செய்வார்? பெருமான், தொண்டனுக்குத் தூது சென்ற சிறப்பினை உரைத்துப் பெருமானின் திருநடனத்தைச் சிறப்பிக்கின்றார் கவிஞர். 'சந்து போனால் என்பது, ‘சந்து நகர்ந்து போனால்' எனவும் பொருள்படும். சந்து நகர்ந்தால் அசைவின்றி நிற்க முடியாமல் போய்க் கால்கள் தாமாகவே ஆட்டம் கொடுக்கும்; இப்படிக் கூறியதாகவும் நாம் கொள்ளலாம். ஒற்றி யாச்சே! திருவாரூரிலே ஒரு சமயம் காளமேகப் புலவர் தியாகேசப் பெருமானைத் தரிசனம் செய்து கொண்டிருந்தார். அப்பொழுது அவருடைய திரு நடனத்தைக் கண்ட அவருக்குப் பெருமானைத் துதித்துப் பாடவேண்டும் போலிருந்தது. அந்த ஆட்டத்தைக் கேலிசெய்வது போல வியந்து பாடுகின்றார். ஆடும் தியாகரே ஆட்டமேன் தானுமக்கு வீடும் சமுசார மேலிட்டுக் கூடிச் செருக்கி விளையாடச் சிறுவரிரண் டாச்சே இருக்குமூ ரொற்றி யாச்சே? (116) திரு நடனம் செய்யும் தியாகராயப் பெருமானே! உமக்கு ஏனய்யா இந்த வேண்டாத ஆட்டம் எல்லாம்? வீடும் சமுசார பந்தமும் அதிகமாகச் சேர்ந்து போய்விட்டதே! கர்வத்தோடு விளையாடிக் கொண்டிருக்க ஆண் மக்களும் இருவர் பிறந்து ஆய்விட்டதே! நீர் இருக்கின்ற ஊரும் ஒற்றியூராயிற்றே (ஒத்திக்கு வைக்கப்பட்டிருப்பதாயிற்றே) - ஆட்டம் ஆடம்பர வாழ்வு எனவும், ஒற்றி கடனுக்கு ஈடாக போக்கியம் வைக்கப்படுவது எனவும் பொருள்பட்டு நிந்தையாக அமைவதும் காண்க. "வளமானவர் ஆட்டமிடுவதிலே பொரு ளிருக்கிறது: உமக்கு எதற்கு ஐயனே ஆட்ட மெல்லாம்?" என்று உரிமையோடு கேட்கின்றார் கவிஞர். வயிரம் இருப்பதா! செருக்கு மிகுந்த செல்வர் ஒருவர், திருவாரூர்த் தியாகேசருக்கு ஒரு வைர மாலையினை அணிவித்துத் தம்மைக் குறித்துப் பெருமை பேசிக்கொண்டிருந்தார். அப்போது, காளமேகம் பாடியது இது. தியாகராயரைப் புலவர் தரிசித்துக்